சோனியா நித்யானந்த்
சோனியா நித்யானந்த் (Soniya Nityanand)(பிறப்பு 6 செப்டம்பர் 1962) இரத்தவியலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார்.[1] இவர் லக்னோவிலுள்ள கிங் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[2][3] பின்னர் நித்யானந்த் 1996-ல் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்புத் துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார்.[2][3]
தொழில்
[தொகு]நித்யானந்த் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில், லக்னோவில் உள்ள கே. ஜி. எம். சியில் மருத்துவத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கு இவர் அக்டோபர் 1991 முதல் நவம்பர் 1993 வரை பணியாற்றினார்.[3] இதன் பிறகு, நித்யானந்த், நவம்பர் 1993 முதல் எஸ். ஜி. பி. ஜி. ஐ. எம். எசில் பேராசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் நோயெதிர்ப்புத் துறையிலும் சமீபத்தில் குருதியியல் துறையிலும் பணியாற்றினார்.[3]
இவர் 1991-1992 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்பு மற்றும் குருதியியல் பிரிவில் வருகை தரும் சகாவாக இருந்துள்ளார்.
2021-ல், மருத்துவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
விருதுகள்
[தொகு]நித்யானந்த் பல விருதுகளைப் பெற்றவர்:
- 2003-04க்கான தொழில் வளர்ச்சிக்கான உயிரி தொழில்நுட்பத் துறை தேசிய உயிரியல் விருது[3]
- இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இளம் விஞ்ஞானி விருது 1990[3]
- 2000ஆம் ஆண்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ஜே. சி. படேல் மற்றும் பி. சி. மேத்தா விருது[3]
- மருத்துவர் என். என். குப்தா தங்கப் பதக்கம்[3]
- சிறந்த மருத்துவ மாணவருக்கான அதிபர் பதக்கம்[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Soniya Nityanand Hematologist,HEMATOLOGY in Lucknow Uttar-Pradesh - Click4Doctor.in". www.click4doctor.in. Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
- ↑ 2.0 2.1 "The Faculty". www.sgpgi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "StreeShakti - The Parallel Force". www.streeshakti.com. Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.