உள்ளடக்கத்துக்குச் செல்

சோதனை விலங்கியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதனை விலங்கியல் ஆய்விதழ்
Journal of Experimental Zoology
 
சுருக்கமான பெயர்(கள்) J. Exp. Zool.
துறை விலங்கியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: கண்ட்டர் பி. வாக்னர்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் பிளக்வெல் பதிப்பகம்
வரலாறு 1904–முதல்
வெளியீட்டு இடைவெளி: 10/ஆண்டிற்கு (A)
8/ஆண்டிற்கு (B)
தாக்க காரணி 1.226 (A)
2.083 (B) (2015)
குறியிடல்
ISSN J. Exp. Zool. A:
1932-5223 (அச்சு)
1932-5231 (இணையம்)
J. Exp. Zool. B:
1552-5007 (அச்சு)
1552-5015 (இணையம்)

சோதனை விலங்கியல் ஆய்விதழ் (Journal of Experimental Zoology) என்பது சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இந்த விலங்கியல் ஆய்விதழானது 1904இல் நிறுவப்பட்டது.[1] 2003ஆம் ஆண்டில், இந்த ஆய்விதழ், சோதனை விலங்கியல் ஆய்விதழ் பகுதி A: சுற்றுச்சூழல் மரபியல் மற்றும் உடலியல் என வெளிவந்தது. இதன் தற்போதைய தொகுப்பாசிரியர்கள் டேவிட் க்ரூஸ் மற்றும் ராண்டி நெல்சன் ஆகியோராவார். சோதனை விலங்கியல் ஆய்விதழ் பகுதி B: மூலக்கூறு மற்றும் மேம்பாட்டுப் பரிணாமம் ஆகும். இந்த வெளியீட்டின் தற்போதைய தொகுப்பாசிரியர் எஹாப் அபுஹீஃப் ஆவார். இந்த இரண்டு பகுதிகளும் தற்போது பிளாக்வெல் பதிப்பகம் வெளியிடுகிறது. முதலில், பகுதி Aயின் தற்போதைய தலைப்பு, சுற்றுச்சூழல் மரபியல் மற்றும் உடலியல் என மாறும் வரை (2007), ஒப்பீட்டுப் பரிசோதனை உயிரியல் என்று அழைக்கப்பட்டது. பகுதி B, மூலக்கூறு மற்றும் மேம்பாட்டுப் பரிணாமம் எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Trove - The Journal of Experimental Zoology". Trove.nla.gov.au. பார்க்கப்பட்ட நாள் 2011-08-09.

வெளி இணைப்புகள்

[தொகு]