உள்ளடக்கத்துக்குச் செல்

சோட்டோனெரா லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோட்டோனெரா லாகசு (Sotonera Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 76.75° மற்றும் 17.49° மே [2] என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 63 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தின் மையத்தில் இந்த ஏரி காணப்படுகிறது. டைட்டனின் பெரிய ஏரிகள் யாவும் இதன் வடதுருவ மண்டலத்தில் காணப்படுகின்றன.

நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள எசுப்பானியாவின் சோட்டோனெரா ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு சோட்டோனெரா லாகசு என்று 2007 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. Planetary names
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துCoustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டோனெரா_லாகசு&oldid=2173837" இலிருந்து மீள்விக்கப்பட்டது