சோடியம் ஐதரோசெலீனைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் பைசெலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
12195-50-5 | |
ChemSpider | 67024398 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 129628184 |
| |
பண்புகள் | |
NaSeH | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் ஐதரோசெலீனைடு (Sodium hydroselenide) என்பது NaSeH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம், செலீனியம், ஐதரசன் அணுக்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]சோடியம் போரோ ஐதரைடுடன் செலீனியத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் சோடியம் ஐதரோசெலீனைடை உருவாக்கலாம்:
- Se + NaBH4 → NaSeH + BH3(வளிமம்)
சோடியம் ஈத்தாக்சைடுடன் ஐதரசன் செலீனைடைச் சேர்த்து வினைப்படுத்தியும் மாற்று முறையில் இதை தயாரிக்கலாம்:[1]
- NaOEt + H2Se → NaSeH + HOEt
சோடியம் ஐதரோசெலீனைடு சேமிப்பிற்காக தயாரிக்கப்படுவதில்லை. மாறாக உற்பத்தி செய்யப்பட்ட உடனேயே பயன்படுத்தப்படுகிறது.
பண்புகள்
[தொகு]சோடியம் ஐதரோசெலீனைடு நீர் அல்லது எத்தனாலில் கரைகிறது. சோடியம் ஐதரோசெலீனைடு ஈரப்பதமான காற்றில் சோடியம் பாலிசெலினைடு மற்றும் தனிம செலீனியமாக மாற்றப்படுகிறது.
சோடியம் ஐதரோசெலீனைடு சிறிதளவு ஒடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.[1]
பயன்
[தொகு]கரிமத் தொகுப்பு வினைகளில் சோடியம் ஐதரோசெலீனைடு, விளைபொருளில் செலீனியத்தைச் செருகுவதற்கான ஒரு மின்னணு பதிலீட்டு முகவராகப் பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Młochowski, Jacek; Syper, Ludwik (2001). "Sodium Hydrogen Selenide". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rs079. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.