உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் இருதயோபாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் இருதயோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
13721-37-4 Y
InChI
  • InChI=1S/3Na.H3O2PS2/c;;;1-3(2,4)5/h;;;(H3,1,2,4,5)/q3*+1;/p-3
    Key: OFLNOEMLSXBOFY-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20430759
118856075
  • [O-]P(=S)([O-])[S-].[Na+].[Na+].[Na+]
பண்புகள்
Na3PS2O2
வாய்ப்பாட்டு எடை 196.072 கிராம் மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

சோடியம் இருதயோபாசுபேட்டு (Sodium dithiophosphate) Na3PS2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டைதயோபாசுபேட்டு என்ற பெயராலும் இந்த உப்பு அறியப்படுகிறது. பொதுவாக நீரேற்றப்பட்ட திடப்பொருளாகவோ அல்லது சோடியம் மோனோதயோபாசுபேட்டு மற்றும் சோடியம் டிரைதயோபாசுபேட்டு போன்ற பிற தயோபாசுபேட்டுகளுடன் சேர்ந்து நீர் கரைசலாகவோ இந்த உப்பு வழங்கப்படுகிறது. இச்சேர்மம் நிறமற்ற ஒரு சேர்மமாகும். ஆனால் வணிக மாதிரிகள் அசுத்தங்கள் இருப்பதால் கருமையாகத் தோன்றும். மாலிப்டினத்தை அதன் தாதுக்களிலிருந்து தனிமைப்படுத்த சோடியம் இருதயோபாசுபேட்டு பயன்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

பாசுபரஸ் பெண்டாசல்பைடின் அடிப்படையான நீராற்பகுப்பு வினையுடன் தொடங்கி பலபடி நிலை செயல்முறையில் தயாரிக்கப்படுகிறது:[1]

P2S5 + 6 NaOH → 2 Na3PO2S2 + H2S + 2 H2O

குறிப்பாக ஒரு நீர் கரைசலாக சூடாக்கும் போது இந்த உப்பு Na3PO2S2.(H2O)11 என்ற நீரேற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு நீராற்பகுப்புக்கு ஆளாகிறது:

Na3PO2S2 + 2 H2O → Na3PO3S + H2S

எக்சு கதிர் படிகவியல் முடிவு சோடியம் இருதயோபாசுபேட்டு சேர்மத்தின் கட்டமைப்பை வழங்குகிறது.[2][3]

பயன்பாடுகள்

[தொகு]

தாதுக்களின் பிற கூறுகளிலிருந்து மாலிப்டினைட்டை (MoS2) சுத்திகரிப்பதில் இந்த உப்பு ஒரு மிதவை முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு இது பொதுவாக "நோக்சு வினைப்பொருள்" என்று அழைக்கப்படுகிறது. (1948 ஆம் ஆண்டில் காப்புரிமை பெற்ற சார்லசு எம். நோக்சு என்பவரின் பெயரால் இவ்வினையாக்கிக்கு அப்பெயரிடப்பட்டது). பாசுபரசு பெண்டாசல்பைடை சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இந்த உப்பு உருவாகிறது. பெரும்பாலும் அசுத்த வினையாக்கிகளைப் பயன்படுத்தி விரும்பிய உப்பு மற்றும் தொடர்புடைய தயோபாசுபேட்டுகள் மற்றும் ஆக்சிசனேற்றப்பட்ட இனங்களின் கலவையைக் கொடுக்கிறது. பொதுவாக நீர்வெறுப்புத் தன்மை கொண்ட மாலிப்டினைட்டு துகள்கள், இந்த உப்பின் முன்னிலையில் நீர்விருப்பத் தன்மை கொண்ட துகள்களாக மாறுகின்றன. இந்த சூழலில், நோக்சு வினைப்பொருள் "மனச்சோர்வு மருந்து" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மாலிப்டினைட்டு அல்லாத மற்ற திடப்பொருட்களின் மிதக்கும் போக்கை அடக்குகிறது.[4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. Klement "Phosphorus" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 571-2.
  2. Elias, D. P. (1957). "Crystallographic Data on Some Sodium Phosphorothioates". Acta Crystallographica 10 (9): 600. doi:10.1107/S0365110X57002108. Bibcode: 1957AcCry..10..600E. 
  3. Pompetzki, Markus; Dinnebier, Robert E.; Jansen, Martin (2003). "Sodium dithiophosphate(V): Crystal structure, sodium ionic conductivity and dismutation". Solid State Sciences 5 (11–12): 1439–1444. doi:10.1016/j.solidstatesciences.2003.07.002. Bibcode: 2003SSSci...5.1439P. 
  4. Baki Yarar, "Flotation" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Wienheim, 2005.
  5. Yarar, Baki (2000). "Flotation". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.b02_23. ISBN 3527306730.