உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்பிறப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

சொற்பிறப்பியல் (etymology) என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள்.

நீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது மொழிநூலைத் (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் வேர்ச் சொற்கள் அறியப்படுவதுடன் அம்மொழிக் குடும்பத்தின் மூல மொழியிலிருந்து அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும்.

சொல் மூலங்களின் வகைகள்

[தொகு]

சொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:

புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,

என்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்பிறப்பியல்&oldid=3213238" இலிருந்து மீள்விக்கப்பட்டது