சொக்கிகுளம் சோமலிங்கேசுவரர் கோயில்
Appearance
சொக்கிகுளம் சோமலிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் மதுரை மாவட்டத்தில் சொக்கிகுளம் என்னுமிடத்தில் உள்ளது.[1]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலின் மூலவராக சோமலிங்கேசுவரர் உள்ளார். சிவனின் ஆவுடை வடக்கு நோக்கிய நிலையில் உள்ளது.[1]
அமைப்பு
[தொகு]இக்கோயிலில் பெருமாளுக்கும் சன்னதி அமைந்துள்ளது. சிவனும் பெருமாளும் சேர்ந்து சிவ பெருமாளாகக் காட்சியளிக்கின்றனர். திருப்பதி பெருமாளின் தோற்றத்தைப் போல பெருமாள் காணப்படுகிறார். இப்பெருமாளை திருப்பதியிலிருந்து கொண்டு வந்து அமைத்ததாகக் கூறுகின்றனர். [1]
திருவிழாக்கள்
[தொகு]பிரதோஷ நாட்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சிவனுக்கும், புரட்டாசி நாட்களில் பெருமாளுக்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. மூலவர் சிவனாக இருந்தபோதிலும் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.[1]