சைரன் (தொலைக்காட்சி தொடர்)
சைரன் | |
---|---|
வகை | நாடகம் கற்பனை பரபரப்பூட்டும் மர்மம் |
உருவாக்கம் | எரிக் வால்ட் டீன் வைட் |
நடிப்பு |
|
பின்னணி இசை |
|
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 36 (list of episodes) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
தயாரிப்பாளர்கள் |
|
படப்பிடிப்பு தளங்கள் | வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா |
ஒளிப்பதிவு |
|
படவி அமைப்பு | ஒற்றை ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | 41–45 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | Stockton Drive Inc. |
விநியோகம் | டிஸ்னி–எபிசி டொமஸ்டிக் தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | பிரிபார்ம் |
ஒளிபரப்பான காலம் | மார்ச்சு 29, 2018 மே 28, 2020 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
சைரன் (Siren) என்பது அமெரிக்க நாட்டு கற்பனை பரபரப்பூட்டும் மர்மத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 29 மார்ச் 2018[1] முதல் 28 மே 2020 ஆம் ஆண்டு வரை பிரிபார்ம் தொலைக்காட்சியில் மூன்று பருவங்களாக ஒளிபரப்பாகி, 36 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. மைக்கேல் ஏ. லெவின் என்பவர் இசை அமைத்திருந்தார்.[2][3]
கதை
[தொகு]பருவம் 1
[தொகு]வாஷிங்டன் பகுதியில் உள்ள பிரிஸ்டல் கோவ் என்பது ஒரு கடலோர நகரம். இதனை புராணங்களில் கடற்கன்னிகளின் வீடு என அழைத்துள்ளனர். மீன் வலையில் ஒரு கடற்கன்னி சிக்கிக்கொள்கிறாள். அவள் குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் இராணுவம் அவளை கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்கிறது. இடையே மாட்டிக்கொண்ட கடற்கன்னியை தேடி அவளுடைய சகோதரி நிலப்பகுதிக்கு வருகிறார்.
கடல் உயிரின ஆர்வலரான பென் (அலெக்ஸ் ரோ) மற்றும் மேடி (ஃபோலா எவன்ஸ்-அகிங்போலா) ஆகியோர் கடற்கன்னியின் சகோதரியை தேட உதவுகிறார்கள். இறுதியாக கடற்கன்னி சகோதரியை காண்கிறார்கள். இரு சகோதரிகளும் கடலுக்குள் சென்று விடுகிறார்கள்.
ஒரு மாதங்களுக்குப் பிறகு கடற்கன்னி சகோதரிகள் மீண்டும் நிலப்பகுதிக்கு வந்து, பென் மற்றும் மேடியை சந்திக்கிறார்கள். தங்களுக்கு போதுமான உணவு கடலில் கிடைப்பதில்லை என முறையிடுகிறார்கள். பொய்யான ஒரு நிறுவனம் கடற்கன்னிகளின் உணவை அதிகளவு கொள்முதல் செய்வதை பென் கண்டறிகிறார். ஒரு ராணுவ அதிகாரியும், பென்னின் தந்தையும் இணைந்து கடற்கன்னிகளை பிடித்து ஆய்வே மேற்கொள்ள இவ்வாறு செய்வதை அறிகிறான்.
மனிதர்கள் மேல் கோபம் கொண்ட கடற்கன்னிகளுக்கும், கடற்கன்னிகள் மேல் கோபம் கொண்ட மனிதர்களுக்கும் நடுவே நின்று பென் சமாதானம் செய்து வைக்கிறான்.
நடிகர்கள்
[தொகு]- அலெக்ஸ் ரோ
- எலைன் பவல்
- இயன் வெர்டூன்
- ரேனா ஓவன்
- ஃபோலா எவன்ஸ்-அகிங்போலா
- சிபோங்கிள் மலாம்போ
பருவங்கள்
[தொகு]Season | Episodes | Originally aired | |||
---|---|---|---|---|---|
First aired | Last aired | ||||
1 | 10 | மார்ச்சு 29, 2018 | மே 24, 2018 | ||
2 | 16 | சனவரி 24, 2019 | ஆகத்து 1, 2019 | ||
3 | 10 | ஏப்ரல் 2, 2020 | மே 28, 2020 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramos, Dino-Ray (October 7, 2017). "Freeform's Mermaid Drama 'Siren' Gets Premiere Date, Casts Duo, Releases Clip". Deadline Hollywood.
- ↑ "Michael A. Levine Scoring Freeform's 'Siren' | Film Music Reporter". filmmusicreporter.com (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ "PODCAST: Siren Composer Michael A. Levine" (in en-US). 2018-04-04 இம் மூலத்தில் இருந்து 2019-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190207045642/https://scifitalk.com/2018/04/04/podcast-siren-composer-michael-a-levine/.