உள்ளடக்கத்துக்குச் செல்

சேமிப்பு வேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஞ்சி வேர்கள்

சேமிப்பு வேர்கள் (English: Underground storage organ) என்பவை சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்த பருத்தப் பாகங்கள் சேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன. இவ்வகை வேர்கள் காணப்படும் தாவர இனங்கள் வேர்த் தண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன[1].

வகைகள்

[தொகு]

சில வேர்த் தண்டுச் செடிகளில் முதன்மை வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அதன் வடிவங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. கூம்பு வடிவம் (எ.கா கேரட்டு), கதிர்வடிவம் (எ.கா முள்ளங்கி), பம்பர வடிவம் (எ.கா பீட்டுரூட்டு).

அதே போல சில வேர்த் தண்டுச் செடிகளில் வேற்றிட வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அவ்வகைத் தாவரங்களின் வேர்க் கிழங்குகளை மூன்று வகையாக பிரிப்பர். கிழங்கு வேர்கள் (எ.கா சர்க்கரை வள்ளி கிழங்கு), கொத்து வேர்கள் (எ.கா டாலியா), முடிச்சு வேர்கள் (எ.கா மஞ்சள்).

குறிப்புகள்

[தொகு]
  1. "தமிழ்நாடு அரசு பாடப் புத்தங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2015-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமிப்பு_வேர்&oldid=3555999" இலிருந்து மீள்விக்கப்பட்டது