செர்னோவைட்டு-(Y)
Appearance
செர்னோவைட்டு-(Y) Chernovite-(Y) | |
---|---|
செர்னோவைட்டு-(Y) மாதிரி | |
பொதுவானாவை | |
வகை | செனோடைம் குழு |
வேதி வாய்பாடு | Y(AsO4) |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, வெளிர் மஞ்சள் |
படிக அமைப்பு | நாற்கோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5-5 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒப்படர்த்தி | 4.866 கி/செ.மீ3 |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கத்தன்மையும் ஒளிர்தலும் இல்லை |
மேற்கோள்கள் | [1] |
செர்னோவைட்டு-(Y) (Chernovite-(Y)) என்பது (மீண்டும் மீண்டும் வரும் அலகு) YAsO4) என்ற வாய்பாடு கொண்ட ஒரு கனிமமாகும். முதன் முதலில் 1967 ஆம் ஆண்டில் உருசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உருசிய புவியியலாளர் அலெக்சாண்டர் ஏ. செர்னோவ் நினைவாக கனிமத்திற்கு செர்னோவைட்டு எனப் பெயரிடப்பட்டது. பின்னொட்டு (Y) 1987 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. செர்னோவைட்டு-(Y) நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் நிறத்தில் கண்ணாடி பளபளப்புடன் காணப்படுகிறது. நாற்கோணக படிக அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. கனிமத்தில் இட்ரியம், ஆர்சனிக்கு மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் 1:1:4 விகிதத்தில் கலந்துள்ளன. 4.866கி/செ.மீ3 என்ற குறிப்பிட்ட ஒப்படர்த்தியைக் கொண்டுள்ளது.[1]
செனோடைம் கனிமக் குழுவின் ஒரு பகுதியாகவும் செர்னோவைட்டு-(Y) உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் செர்னோவைட்டு-(Y) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- "Chernovite-(Y)". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04-20.