உள்ளடக்கத்துக்குச் செல்

செருமேனியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமேனியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
13573-08-5 Y
ChemSpider 4885744
EC number 236-998-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6327215
  • I[Ge]I
பண்புகள்
GeI2
வாய்ப்பாட்டு எடை 326.44 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்[1]
அடர்த்தி 5.37 கி•செ.மீ−3 (25 °C)[2]
உருகுநிலை 428 °செல்சியசு[3]
கொதிநிலை 550 °செல்சியசு (சிதைவடையும்)[3]
கட்டமைப்பு
புறவெளித் தொகுதி P3m1 (No. 164)[4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் இருபுளோரைடு
செருமேனியம் இருகுளோரைடு
செருமேனியம் இருபுரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வெள்ளீய அயோடைடு
ஈயம்(II) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செருமேனியம்(II) அயோடைடு (Germanium(II) iodide) என்பது GeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செருமேனியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

செருமேனியம்(IV) அயோடைடுடன் ஐதரோ அயோடிக் அமிலம், ஐதரோ பாசுபரசு அமிலம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்:[1]

GeI4 + H2O + H3PO2 → GeI2 + H3PO3 + 2 HI

செருமேனியம் மோனோசல்பைடு அல்லது செருமேனியம் மோனாக்சைடுடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்.[1]

GeO + 2 HI → GeI2 + H2O
GeS + 2 HI → GeI2 + H2S}

200 – 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியமும் அயோடினும் நேரடியாக வினையில் ஈடுபட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது.:[1]

Ge + I2 → GeI2

HGeI3சேர்மம் சிதைவுக்கு உட்பட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது. HGeCl3உடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினை புரியச்செய்தால் HGeI3 சேர்மத்தை தயாரிக்கமுடியும்:[5]

HGeCl3 + 3 HI → HGeI3 + HCl
HGeI3 → GeI2 + HI

பண்புகள்

[தொகு]

செருமேனியம்(II) அயோடைடு மஞ்சள் நிறப் படிகமாகும். இது ஈரப்பதத்தின் முன்னிலையில் செருமேனியம்(II) ஐதராக்சைடாக மெதுவாக நீராற்பகுப்பு அடைகிறது. ஐதரோ கார்பன்களில் இது கரையாது. குளோரோஃபார்மிலும் கார்பன் டெட்ராகுளோரைடிலும் சிறிது கரைகிறது. a = 413 பைக்கோ மீட்டர் மற்றும் c = 679 பைக்கோமீட்டர்[1]என்ற அளபுருக்களுடன் செருமேனியம்(II) அயோடைடு சேர்மம் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்றுகொள்கிறது. 550 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் மற்றும் செருமேனியம் டெட்ரா அயோடைடாக விகிதாசாரமின்றி இது சிதைகிறது.[6]

பண்புகள்

[தொகு]

செருமேனியம்(II) அயோடைடு கார்பீனுடன் வினைபுரிந்து நிலையான சேர்மங்களை உருவாக்க்குகிறது.[2] மின்னணுவியல் துறையில் செருமேனியம் அடுக்குகளை விகிதாசாரமற்ற வினைகள் மூலம் உருவாக்கப் பயன்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Georg Brauer (Hrsg.), unterMitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der PräparativenAnorganischenChemie. 3., umgearbeiteteAuflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 727.
  2. 2.0 2.1 Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
  3. 3.0 3.1 William M. Haynes (2012), CRC Handbook of Chemistry and Physics, 93rd Edition, CRC Press, pp. 4–65, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-143988049-4
  4. Jean d’Ans, Ellen Lax, Roger Blachnik (1998), TaschenbuchfürChemiker und Physiker, Springer DE, p. 472, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 364258842-5{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Wolfgang Kirmse (2013), Carbene Chemistry 2e, Elsevier, p. 540, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-032316145-9
  6. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 959, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  7. A.G. Milnes (1972), Heterojunctions and Metal Semiconductor Junctions, Elsevier, p. 104, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 032314136-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்(II)_அயோடைடு&oldid=3799563" இலிருந்து மீள்விக்கப்பட்டது