உள்ளடக்கத்துக்குச் செல்

செரினா விட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரினா விட்டி (Serena Viti) இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியரும் வானியற்பியல் துறைத் தலைவரும் ஆவார். இவர் இயற்பியல், வானியல் துறையின் விண்மீன்கள், விண்மீன் உருவாக்கம், பால்வெளிப் படிமலர்ச்சி ஆராய்ச்சிக் குழுவில் பங்கேற்கிறார்.[1]

கல்வி

[தொகு]

இவர் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்திலும் வெசுட்டுபீல்டு கல்லூரியிலும் படித்து 1994 இல் இளம் அறிவியல் பட்டத்தை வானியற்பியலில் பெற்றார். இவர் தன்முனைவர் பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லுரியில் 1997 இல் பெற்றார் இவரது முனைவர் பட்ட ஆய்வு குளிர்ந்த விண்மீன்கள், சூரியக் கரும்புள்ளிகளின் அகச்சிவப்புக் கதிர்நிரல் ஆய்வாகும்..[2] முனைவர் பட்டம் பெற்றதும் இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்க்லைக்கழகத்தில் விண்மீன் உருவாக்கம், வான்வேதியியல் புலத்தில் முதுமுனைவர் ஆய்வில் சேர்ந்தார். பின்னர் 22003 அக்தோபரில் குறிப்பிட்ட காலம் உரோமில் உள்ள இத்தாலி, தேசிய ஆராய்ச்சி மன்ற விரிவுரைத் தகைமையின்கீழ் எர்ழ்செல் அறிவியலாளராக இருந்தார். இவர் 2003 அக்தோபரில் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவந்து அறிவியல் தொழில்நுட்ப ஏந்தமைப்பில் உயர்நிலை ஆய்வுநல்கை ஔறுப்பினர் ஆனார். இங்கு 2004 இல் வானியற்பியல் விரிவுரையாளர் ஆனார். இவர் 2007 உயர்விரிவுரையாளராகவும் 2012 இல் வனியற்பியல் பேராசிரியராகவும் ஆனார். இவர் 2016 இல் இலசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழக வானியற்பியல் துறைத்தலைவர் ஆனார்.[3]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்

[தொகு]

இவர் மூலக்கூற்று வானியற்பியல் இதழின் பதிப்பாசிரியராக இருந்தார்.[4] இவர் ஐரோப்பிய வானியல் கழகத்தின் நடப்புச் செயலாளர் ஆவார்.[5] இவர் 2002 முதல் 2005 வரை அரசு வானியல் கழகத்தின் மன்ற உறுப்பினர் ஆவார். இவர் இக்கழகத்தின் வானியல் சார்ந்த பல அறிவியல் தொழில்நுட்ப அறிவுரைப் பலகங்களிலும் குழுக்களிலும் பணியாற்றுகிறார்.[6][7] இவரது முதன்மை ஆய்வுப்புலம் வான் வேதியியலும் விண்வெளி மூலக்கூறுகளும் பற்றியதாகும்.[8] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்திலும்[9] அரசு வானியல் கழகத்திலும் ஐரோப்பிய வானியல் கழகத்திலும் உறுப்பினர் ஆவார்.[10] இவர் வானியற்பியல் சார் வேதியியல் கழகத்தின் சார்பில் 2004 இல் வான்வேதியியலில் கண்காட்சி ஒன்றை அரசு கழகக் கோடைக் கண்காட்சியாக நடத்தினார்.[11] இவர் நோக்கீட்டு மூலக்கூற்று வானியல் நூலின் இணையாசிரியரும் ஆவார்.[12]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]

இவர் 2006 இல் அரசு வானியல் கழகத்தின் வானியலுக்கான பவுலர் விருதைப் பெற்றார்[13] இவர் 2015 இல் ஆத்திரேலிய வானியல் வான்காணகத்தின் தகவுறு வருகைதரு ஆய்வுநல்கையைப் பெற்றார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prof. Serena Viti". www.ucl.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  2. Viti, Serena (2016). "Infrared Spectra of Cool Stars and Sunspots" (PDF). TAMPA website.
  3. "Astrophysics Head of Group". www.ucl.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  4. "Serena Viti". www.journals.elsevier.com. Archived from the original on 2018-07-26. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  5. Switzerland, Marc Türler and Mathias Beck, ISDC, Observatory of the University of Geneva,. "EAS Contact". eas.unige.ch. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  6. "Astronomy Advisory Panel - Science and Technology Facilities Council". stfc.ukri.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Commons, The Committee Office, House of. "House of Commons - Science and Technology Committee - Written Evidence". publications.parliament.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. UCL. "Professor Serena Viti". UCL Department of Physics and Astronomy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  9. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  10. Switzerland, Marc Türler and Mathias Beck, ISDC, Observatory of the University of Geneva,. "EAS Individual Members". eas.unige.ch. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  11. Viti, Serena; Brown, Wendy; McCoustra, Martin; Fraser, Helen; Mason, Nigel; Massey, Robert (December 2004). "The making of Stars 'R' Us!" (in en). Astronomy and Geophysics 45 (6): 6.22–6.24. doi:10.1046/j.1468-4004.2003.45622.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. https://academic.oup.com/astrogeo/article/45/6/6.22/216291. 
  12. Williams, David A.; Viti, Serena (2009). Observational Molecular Astronomy. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139087445.
  13. "PN05/48: RAS Announces Astronomy Award Winners for 2006 | The Royal Astronomical Society". ras.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.
  14. aaoweb (2014-08-19). "AAO Distinguished Visitor Scheme". www.aao.gov.au (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-26. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரினா_விட்டி&oldid=3959734" இலிருந்து மீள்விக்கப்பட்டது