செயற்கை புல்தரை
செயற்கை புல்தரை (Artificial Turf) என்பது இயற்கையான புல் போல் தோற்றமளிக்கும் செயற்கை இழைகளாலான மேற்பரப்பாகும். இது பெரும்பாலும் விளையாட்டிற்கான அரங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இப்போது குடியிருப்பு புல்வெளிகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை புல்தரை பயன்படுத்துவதற்கான மிக முக்கிய காரணம் அதன் பராமரிப்பில் உள்ள எளிமையேயாகும். செயற்கையான தரைப்பகுதி விளையாட்டு போன்ற கனரகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை தரைப்பகுதி பயன்படுத்தும்போது நீர்ப்பாசனம், கத்தரித்தல் தேவைப்படாது. முழுவதும் மூடப்பட்ட மற்றும் ஓரளவு மூடப்பட்ட விளையாட்டு அரங்கங்களில் இயற்கையான புல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான சூரிய ஒளி பெறுவது மிகவும் கடினமாக இருப்பதால் இவ்வரங்கங்களில் செயற்கை புல்தரை தேவைப்படலாம். ஆனால், செயற்கை புல்தரையானது குறைந்த ஆயுட்காலம், முறையாக தூய்மைப்படுத்துதல், பெட்ரோலியம் பயன்பாடு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவலையளிக்கக்கூடிய அம்சங்கள் ஆகிய குறைபாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 1960 இல் புதிதாக கட்டப்பட்ட ஆஸ்ரோடொபில் பயன்படுத்தப்பட்டபோது கணிசமான கவனத்தை ஈர்த்தது. இந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு மான்சாண்டோவால் உருவாக்கப்பட்டது. மேலும் ஆஸ்ட்ரோ டர்ப் என்றும் அழைக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பொது வர்த்தக சின்னமாக ஆனது. ஆஸ்ட்டோ டர்ப் ஒரு பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாக உள்ளது. 1960களில் முதல் தலைமுறை தரை அமைப்புகள் (அதாவது குறுகிய பைன் இலை போல்) ஊடுருவல்கள் இல்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை செயற்கை தரை அமைப்புகள் நீண்ட இழைகள் மற்றும் மணல் ஊடுருவல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வரலாறு
[தொகு]1960களில் வட கரொலைனாவில் உள்ள ராலே என்ற பகுதியில் குடியேறிய டேவிட் சானி என்பவர் வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். குறிப்பிடத்தக்க செயற்கை தரையை உருவாக்கிய ஆராய்ச்சி முக்கோண பூங்கா ஆராய்ச்சியாளர்களின் குழுவிற்கு தலைமை தாங்கினார்.
செயற்கை புல்தரை முதன்முதலில் 1964 இல் உரோட் தீவின் பிராவிடன்ஸில் உள்ள மோசஸ் பிரவுன் பள்ளியில் ஒரு பொழுதுபோக்கு பகுதியில் நிறுவப்பட்டது.[1] 1966 ஆம் ஆண்டு டெக்சஸின் ஹூயூஸ்டனில் உள்ள ஆஸ்ட்ரோடோமில் செயற்கை புல்தரை நிறுவப்பட்டபோது, இது முக்கியத்துவம் பெற்றது. அதிநவீன உள்விளையாட்டு அரங்கம் 1965 இல் அதன் ஆரம்ப பருவத்தில் இயற்கையான புல்லைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆனால் அது தோல்வியடைந்தது. பருவத்தின் இரண்டாம் பாதியில் கள நிலைமைகள் முற்றிலும் போதுமானதாக ஆனது. இறந்த புற்களுக்கு பச்சை வர்ணம் பூசப்பட்டது.
1970 களின் முற்பகுதியில் அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்கை புல்தரை மற்றும் அதைப் போன்ற மேற்பரப்புகளின் பயன்பாடு பரவலானது. இது அடிப்பந்தாட்டம் மற்றும் கால்பந்துக்காக பயன்படுத்தப்படும் உட்புற மற்றும் வெளிப்புற அரங்கங்களில் நிறுவப்பட்டது. தற்போது வரை தேசிய அளவில் 11,000க்கும் மேற்பட்ட செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானங்கள் நிறுவப்பட்டுள்ளன.[2] 2013 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 1,200 க்கும் மேற்பட்டவை நிறுவப்பட்டன[2]
அடிபந்தாட்டம்
[தொகு]1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஹியூஸ்டனில் பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்ட மைதானத்தில் செயற்கை புல்வெளி முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. உட்புற பயன்பாட்டிற்காக புல் குறிப்பாக வளர்க்கப்பட்டாலும், சில இடங்களில் வீரர்களின் கண்ணை கூசுவதை குறைக்க வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தன.
இதற்கு தீர்வாக ஆஸ்ட்ரோ செம்கிராஸ் என்ற புதிய வகை செயற்கை புல் களத்தில் நிறுவப்பட்டது. அதன் ஆரம்பகால பயன்பாட்டினால், ஆஸ்ட்ரோடர்ஃப் என்ற சொல், எந்தவொரு செயற்கை தரையையும் குறிக்கும் ஒரு சொல்லாக பொதுவாக இருந்து வருகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dave Brady, "It's All So Artificial: The Uncommon Ground", Petersen's 12th Pro Football Annual, 1972. Los Angeles: Petersen Publishing Co., 1972; pp. 62–65.
- ↑ 2.0 2.1 Weeks, Jennifer (2015). "Turf Wars". Distillations Magazine 1 (3): 34–37. https://www.sciencehistory.org/distillations/magazine/turf-wars. பார்த்த நாள்: 22 March 2018.
- ↑ "Definition of Astroturf - Dictionary.com". www.dictionary.com (in ஆங்கிலம்). Archived from the original on 18 Apr 2023. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
This sense of the word has come to be frequently used as a generic term for any artificial turf (in the same way that other brand names have been genericized, such as xerox). When used this way, it's often seen in lowercase (astroturf).