உள்ளடக்கத்துக்குச் செல்

செயசுதரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயசுதரியா
Jyestharya
ជ្យេស្ថាយ៌ា
ஈசானபுர மகாராணியார்
(கி.பி. 803)
முன்னையவர்இராணி செயந்திரபா
(Queen Jayendrabha)
பின்னையவர்மூன்றாம் செயவர்மன்
(Jayavarman III)
பிறப்புபுனோம் பென்
இறப்புகி.பி. ??
ஈசானபுரம்
(சம்புபுரம்)
மரபுஈசானபுரம்
கவுந்தினியம்
சென்லா
அரசமரபுசம்புபுரம்
Som Vong Dynasty
மதம்இந்து சமயம்

செயசுதா அல்லது செயசுதரியா எனும் சம்புபுர செயசுதரியா (ஆங்கிலம்: Jyestharya அல்லது Jyestha அல்லது Jyestharya of Shambhupura; கெமர்: ជ្យេស្ថាយ៌ា; IAST: Jyeṣṭhāryā) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) ஒரு பகுதியான சம்பு புரத்தின் (Shambhupura) மகாராணி ஆவார்.[1]

செயசுதரியா இராணி; கம்போடியாவில் கிடைத்த K. 124 கல்வெட்டு (Inscription K. 124, 803/04) எனும் கல்வெட்டின் மூலம் கி.பி. 803-ஆம் ஆண்டில் அரியணை ஏறினார் என அறியப் படுகிறது. எனினும் இவரின் ஆட்சிக்காலம் உறுதியாகத் தெரியவில்லை.

பொது

[தொகு]

ஈசானபுரம் எனும் நிலப்பகுதி சம்பு புரம் (Sambhupura) என்றும் அழைக்கப்பட்டது. சம்பு புரம் எனும் பெயர் ஈசானபுரம் என மாற்றம் அடைந்தது. தற்போது கெமர் பேரரசு எனும் கம்போடியாவில் சம்பு புரம் ஒரு பகுதியாக உள்ளது.

செயசுதரியாவின் தந்தையார் இரண்டாம் செயவர்மன் (King Jayavarman II) (r. 780-824). கெமர் மக்கள் இன்றும் போற்றிப் புகழப்படும் மாமன்னர். தாயாரின் பெயர் செயந்திரபா; சம்புபுர செயந்திரபா (Jayendrabha) என்றும் அழைக்கப் படுகிறார்.

இரண்டாம் செயவர்மனின் மகள்

[தொகு]

செயசுதரியா, கெமர் பேரரசின் மூன்றாம் செயவர்மன் (Jayavarman III) எனும் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார். இரண்டாம் செயவர்மனுக்கும்; இவரின் மற்றொரு மனைவியான தரணிந்திரதேவி (Dharanindradevi) என்பவருக்கும் பிறந்தவர் மூன்றாம் செயவர்மன் .

ஒரு கல்வெட்டு செயசுதரியாவை, சம்புபுரா செயந்திரபாவின் மூத்த மகள் என்றும்; நிருபத்தேந்திரதேவியின் (Sri Nrpendradevi) பேத்தி என்றும்; இந்திரலோகன் (Sri Indraloka) என்பவரின் கொள்ளுப் பேத்தி என்றும் விவரிக்கிறது.

சம்பு புரத்தின் இராணியார் செயசுதரியா

[தொகு]
செயசுதரியாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மூன்றாம் செயவர்மன்

செயசுதரியா சம்பு புரத்தின் இராணியாக ஆட்சி செய்த போது; இவரின் தந்தையார் கெமர் பேரரசின் மாமன்னராக இருந்தார். அதனால் செயசுதரியா எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் சம்பு புரத்தை ஆட்சி செய்து வந்தார்; தன் மகளுக்கு எவ்வித ஆபத்துகளும் வராமல் கவனித்துக் கொண்டார் (Jyestharya ruled in cooperation with her father Jayavarman II).

இந்தோசீனாவின் பூனான், சென்லா, கெமர் பேரரசு, அங்கோர் ஆகிய நிலப்பகுதிகளின் மீது படை எடுத்த இரண்டாம் செயவர்மன், சம்பு புரத்தின் மீது மட்டும் படை எடுக்கவில்லை. செயசுதரியாவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்றாம் செயவர்மன்; சம்பு புரத்தை, கெமர் பேரரசுடன் (அப்போதைய அங்கோர்) இணைத்தார் என்று அறியப்படுகிறது.

சென்லா இராச்சியத்தின் கடைசி இராணியார்

[தொகு]

செயசுதரியாவிற்குப் பின், 17-ஆம் நூற்றாண்டு வரையில், மகாராணியார் தே (Queen Tey) என்பவர் கெமர் பேரரசின் மகாராணியாக ஆட்சி ஏற்கும் வரையில்; வேறு எந்தப் பெண்ணும் கெமர் பேரரசின் மகாராணியாகப் பொறுப்பு ஏற்கவில்லை. அந்த வகையில் செயசுதரியா தான் சென்லா இராச்சியத்தின் கடைசி இராணியார் என்று அறியப் படுகிறார்.[2]

சான்றுகள்

[தொகு]
  1. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008
  2. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008 (3)

மேலும் படிக்க

[தொகு]
  • Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society, 1951.
  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
  • Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் ஈசானபுரம் மகாராணியார்
803
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயசுதரியா&oldid=3691406" இலிருந்து மீள்விக்கப்பட்டது