செம்ப்ரோன்
செம்ப்ரோன் Central processing unit | |
ஏஎம்டி செம்ப்ரோன் இலச்சினை | |
உருவாக்கப்பட்டது: | ஜூலை 2004 - இன்றுவரை |
உற்பத்தியாளர்: | ஏஎம்டி |
அதிகூடிய சீபியு துடிப்பு: | 1.4 GHz இருந்து 2.2 GHz வரை |
FSB speeds: | 166 MHz இருந்து 200 MHz வரை |
Instruction set: | x86, ஏஎம்டி 64 |
Sockets: | |
Core names:
|
செம்ப்ரோன் (தமிழக வழக்கு: செம்ப்ரான்) என்பது ஏஎம்டி (AMD) என்னும் கணினி நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்யும் கணி மையச் செயலி (அல்லது பணிக்கரு, CPU) ஒன்றின் வணிகப் பெயர். இப்பணிக்கரு (அல்லது கணி மையச்செயலி), பொதுவாக பலவகையான மேசைக்கணினிகளில் பயன்படுமாறு பொது அமைப்பு கொண்ட ஒன்று. இம் மையச்செயலி பல்வேறு புறக்கம்பி அமைப்புகளுடன் பல்வேறு தாய்ச்சுற்றட்டைகளில் உள்ள குழிகளில் பொருந்துமாறும் செய்து வெளியிடப்படுகின்றது. (தக்க புறக்கம்பி அமைப்புகளுடன் ஒரு மையச்செயலி குழிவான இடத்தில் பொருந்தி இருக்கும்படியான அமைப்புக்கு, சி.பி.யு பெறுகடி (சீபியூ சாக்கட்) அல்லது பணிக்கரு பெறுகடி என்று பெயர்).
செம்ப்ரோன் ஏஎம்டி டியூரோன் மாற்றீடு செய்ததுடன் இண்டெல் செலிரோன் டீ (Celeron D) பணிக்கருவுடன் (புரோசரருடன்) போட்டியிடுகின்றது.
செம்ப்ரான் என்னும் பெயர், இலத்தீன் மொழியில் எப்பொழுது, எந்நாளும் என்று பொருள் படும் செம்ப்பெர் semper என்னும் சொல்லில் இருந்து ஏஎம்டி (AMD) நிறுவனம் இச்சொல்லை உருவாக்கினார்கள்
[1].
வரலாறும் வசதிகளும்
[தொகு]முதலில் வெளிவந்த செம்ப்ரோன் புரோசசர்கள் ஏஎம்டி அத்லோன் எக்ஸ்பி தறோபிறெட் கோர் ஐ அடிப்படையாகக் கொண்டு சாக்கட் A இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டது. இவை 166 மெகா ஹேட்ஸ் FSB, மற்றும் 256 கிலோபைட் Level 2 காஷ் நினைவகத்தையும் கொண்டுருந்தது. பின்னர் ஏஎம்டி 3000+ புரோசசரை பார்ர்டோன் கோர் ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியது. இதில் 512 கிலோபைட் நினைவகம் இருந்தது.
இரண்டாம் தலைமுறை செம்ப்ரோன் சாக்கட் 754 அத்லோன் 64பிட் ஐப் பின்பற்றி உருவாக்கபப்ட்டதாகும். இதில் அதிவேக காஷ் நினைவகம் அத்லோன் 64பிட் ஐவிட க்குறைவானதாகும். முன்னைய மாதிரிகளில் 64பிட் ஆதரவு இருக்கவில்லை. எவ்வாறென்றாலும் அத்லோன் 64 போலவே இதிலும் பல வசதிகள் உண்டு. 2005 ஆம் ஆண்டின் அரைப்பாகத்தில் 64பிட் செம்ரோன் புரோசர்களை ஏஎம்டி அறிமுகம் செய்தது. சில ஊடகவியலாளர்கள் (ஏஎம்டி அல்லாத) புரோசர்களை செம்ப்ரோன் 64 என்றவாறும் அழைத்தனர்.
2006ஆம் ஆம் ஆண்டில் சாக்கெட் ஏஎம்2 மற்றும் சாக்கட் எஸ்1 இற்கான புரோசர்கள் அறிமுகம் ஆனது. னான் இதை மேம்படுத்தி விரைவில் ஒரு கட்டுரை எழுதுவேன் silicon_solution@rediffmail.com
இவற்றையும் பார்க்க
[தொகு]- A Dissatifying Compromise With AMD's 64 bit Sempron 3400+ டாம்ஸ்ஹாட்வேர் அணுகப்பட்டது 4 ஜூன் 2008 (ஆங்கில மொழியில்)