செம்பியன் நிலவழகன்
செம்பியன் நிலவழகன் | |
---|---|
பிறப்பு | இயற்பெயர்: ஜெயராமன் தந்தை:கிருஷ்ணப்பிள்ளை தாய்:பச்சையம்மாள் நாள்: சூலை 10, 1937 இடம்:செம்பியன் மங்கலம் திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | ஆசிரியர் எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | மரபுக் கவிதைகள் திருக்குறள் உரை காவியம் |
கருப்பொருள் | நீதி |
துணைவர் | வசந்தி |
பிள்ளைகள் | மணிமன்னன் மணிமொழி |
செம்பியன் நிலவழகன் என்பவர் தமிழ் புலவர்களுள் ஒருவராவார்.[1] இவரது இயற்பெயர் ஜெயராமன். இவர் தன் ஊரின் பெயரைத் தனது புனைப்பெயருக்கு முன்னொட்டாக அமைத்துக்கொண்டுள்ளார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]நிலவழகன் திருவண்ணாமலை மாவட்டம் செம்பியன் மங்களம் எனும் ஊரில் 10 ஜூலை 1937 இல் செயராமன், பச்சையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டயம் பெற்றவர். பள்ளியில் ஆசிரியராப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தொகுப்பு நூல்
[தொகு]- தேம்பாவமுதம்
இவர் இயற்றிய பாடல்கள் தேம்பாவமுதம் என்னும் தலைப்பில் இவரது மரபுக் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.[2][3] இதில் நன்மொழி நானாறு, இனியவை ஈராறு, நம்பினார் கெடுவதில்லை போன்ற 45 தலைப்புகளில் வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா பாரதியைப் பாவேந்தர் என்று குறிப்பிடும் பாடல்,[4] முதலான யாப்பியல் நெறியில் அமைந்த பாடல்கள் உள்ளன. இரண்டாம் தொகுதியில் தமிழ் காக்கப் புறப்படு, கம்பன் கவி, விலையேற்றம் முதலான 132 தொகுப்புகளில் பாடல்கள் உள்ளன. ஆங்காங்கே சில இசைப்பாடல்களும் உள்ளன.
பாடல் எடுத்துகாட்டு
[தொகு]பட்டது போதும் உறக்கமும் போதும் படுதுயரால்
கெட்டது போதும் இனியும் உறங்கிக் கிடப்பதுவோ
விட்டது துன்பம் விளைந்தது வீரம் விறுவிறுப்பாய்ச்
சட்டென ஆர்த்தெழு வோம்’தமிழ் ஈழம்’ தழைத்திடவே. (கட்டளைக் கலித்துறை) [5]
சிறப்புக் கலையனைத்தும் செம்மொழியி னூடே
சிறப்பாய் நிறைந்தே சிறக்கும் - சிறப்புறவே
எல்லாம் அறிந்திடலாம் எல்லாமும் கற்றிடலாம்
இல்லை இதற்கோர் இணை. (வெண்பா) [6]
பிற நூல்கள்
[தொகு]- பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு (யாப்பியல்) [7]
இதில் இலக்கணம் கூறும் யாப்பு உறுப்புகளுக்கு எளிய முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பிற்காலத்திய கும்மி, சிந்து, வண்ணம், நாட்டுப்புறப் பாடல்|நாட்டுப்பாடல்]] ஆகியவற்றிற்கும் விளக்கங்கள் உள்ளன.[8]
- பொன்னாத்தாள் [9]
இது வெண்பா, அகவல், விருத்தம் ஆகிய மரபுப் பாடலகளால் காவியமாகப் படைக்கப்பட்ட ஒரு காவியம் - திருக்குறள் மூலமும் மெய்யுரையும் [10][11]
இந்த நூல் வாலறிவன் வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள ஆறு வெண்பாக்களுடனும், நூன்முகம் என்னும் தலைப்பில் அமைந்துள்ள ஆறு வெண்பாக்களுடனும் தொடங்கி 1330 குறட்பாக்களுக்கும் சுருக்கமான கருத்துரை வழங்குகிறது. - ஆதிபகவன் யார்
திருக்குறள் முதல் குறளிலுள்ள தொடருக்கு இந்த நூல் விளக்கம் தருகிறது.[12]
மேற்கோள்
[தொகு]- ↑ https://m.dinamani.com/all-editions/edition-chennai/2011/feb/01/தமிழ்-திருவிழா-305254.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ முதல் தொகுதி 240 பக்கங்கள், இரண்டாம் தொகுதி 240 பக்கங்கள்
- ↑ கங்காராணி பதிப்பகம், பொழிச்சலூர், சென்னை 74, ஆண்டு 2017
- ↑ முதல் தொகுதி, பக்கம் 179
- ↑ தொகுதி 2 பக்கம் 73
- ↑ செம்மொழி அந்தாதி என்னும் தலைப்பில் உள்ள 10 அந்தாதிப் பாடல்களில் 5-ஆம் பாடல், முதல் தொகுதி, பக்கம் 116
- ↑ கங்காராணி பதிப்பகம், பொழிச்சலார், சென்னை 74, 2017, 176 பக்கம்
- ↑ பக்கம் 163 முதல்
- ↑ மணிமன்னன் வெளியீடு, புலிவானந்தல், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 606 904, ஏப்ரல் 2001
- ↑ ஆதிபகவன் நிலையம், உள்ளகரம், சென்னை 91, 12 ஆம் பதிப்பு, ஏப்பிரல் 2018
- ↑ திருக்குறள் மூலமும் மெய்யுரையும் - பதிவிறக்கம் செய்ய
- ↑ விளக்கம்