உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு மார்பு கானாங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பழுப்பு மார்பு கானாங்கோழி (Amaurornis fuscus zeylonicus) என்பது ரெயில் மற்றும் கிரேக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்பறவையான இராலிடே குடும்பத்தைச் சேர்ந்த அமரோர்னிஸ் ஃபஸ்கஸ் பறவை இனத்தின் கிளையினம் ஆகும்.

விளக்கம்

[தொகு]

செம்பழுப்பு மார்பு கானாங்கோழியானது காடை அளவில் சுமார் 22 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இதன் அலகு பச்சை நிறத்தில் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் நிறத்திலும், கண்ணைச் சுற்றி சிவப்பு நிற வளையம் கொண்டிருக்கும். இதன் கால்கள் சிறப்பு நிறம் கொண்டவை. இது பொதுவில் வெள்ளை மார்பு நீர்க் கோழியைப் போல பொதுவில் தோற்றம் தரும். இதன் நெற்றி, முகத்தின் பக்கங்கள், கீழ்த் தொண்டை, மார்பு போன்றவை ஒயின் போன்ற செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேல் பகுதி ஆலிவ் நிறம் தோய்ந்த செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். மோவாயும், தொண்டையும் வெண்மையாக இருக்கும். வயிறும் பக்கங்களும் ஆலிவ் நிறம் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வாலடி வெள்ளை கரையுடன் கூடிய பழுப்பு நிறத்தில் இருக்கும். பறக்கும்போது தொங்கும் கால்கள் சிவப்பு நிறத்தில் தெளிவாக தெரியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இல்லை.[1]

வாழிடம்

[தொகு]

செம்பழுப்பு மார்பு கானாங்கோழிகள் கேரள, கருநாடக மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைச் சார்ந்த பகுதிகளில் நீர் நிலைகளின் கரைகளில் நாணல் புதர்களிலும், நெல் வயல்களிலும் காணப்படுகின்றன. மலைப் பகுதிகளில் 2000 மீட்டர் உயரம் வரையும் காணப்படுகின்றன.[1]

இவற்றின் பழக்க வழக்கங்கள் மற்ற காணான்கோழிகளை ஒத்ததாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 117–118.