உள்ளடக்கத்துக்குச் செல்

செப்பு நாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
5 மிமீ ஒட்டுதல் ஆதரவு செப்பு நாடா

செப்பு நாடா (Copper tape) என்பது மெல்லிய செம்பு துண்டானது, பெரும்பாலும் ஒட்டும் பசையுடன் கூடியதாகும். இது பெரும்பாலான வன்பொருள் மற்றும் தோட்டக்கலை கடைகளிலும், சில நேரங்களில் மின்னணு கடைகளிலும் கிடைக்கின்றது. இந்தச் செப்பு நாடா, தோட்டங்கள், தொட்டிகளில் நடப்படும் தாவரங்கள், பழ மரங்களின் தூர், பிற மரங்களிலும் புதர்களிலும் ஓடில்லா நத்தை, நத்தைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. மின்காந்தக் கவசம், மின்னணுவியலில் குறைந்த அளவிலான மேற்பரப்பு ஏற்றம் செலுத்து கம்பி போன்ற பிற பயன்பாடுகளுக்கும், ஒளி ஊடுருவும் விளக்குகள் உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு வடிவங்களில் - கடத்தும் பிசின் மற்றும் கடத்தும் தன்மையில்லா பிசினுடன் (இது மிகவும் பொதுவானது) கிடைக்கின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Copper Tape? (with picture)". About Mechanics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்பு_நாடா&oldid=4143936" இலிருந்து மீள்விக்கப்பட்டது