சென் தா
சென் தா Chen Da | |
---|---|
இயற்பெயர் | 陈达 |
பிறப்பு | சீனா, சியாங்சு, நாண்டோங்கு மாகாணம், டோங்சௌ மாவட்டம். | 22 மார்ச்சு 1937
இறப்பு | 22 சூலை 2016 நாஞ்சிங், சியாங்சு, சீனா | (அகவை 79)
துறை | அணு இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | சிங்குவா பல்கலைக்கழகம் |
சென் தா (Chen Da) சீன நாட்டைச் சேர்ந்த ஓர் அணு இயற்பியலாளராவார். 1937 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் தேதியன்று சென் தா பிறந்தார். சீன அறிவியல் கல்விக் கழகத்தில் கல்வியாளராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]சென் சிங்குவா பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆன்டு பொறியியல் இயற்பியலில் பட்டம் பெற்றார். சீன அணுசக்தி திட்டத்திற்கான வடமேற்கு அணு தொழில்நுட்ப நிறுவனத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. அணுகுண்டு சோதனை மற்றும் ஐதரசன் வெடிகுண்டு சோதனை ஆகிய திட்டங்களில் சென் பங்கேற்றார். [1] சென் சீனாவின் முதல் இராணுவ நிலை யுரேனியம் ஐதரசன் சிர்கோனியம் துடிப்பு அணு உலையை உருவாக்கினார். [2] 1993 ஆம் ஆண்டில் சென்னின் பங்களிப்புக்காக மக்கள் விடுதலை இராணுவத்தால் இவருக்கு தரைப்படை உயர் அலுவலர் பதவி வழங்கப்பட்டது. சீன அறிவியல் கல்விக் கழகத்தின் கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென் 2001 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [3] நாஞ்சிங்கு வானூர்தியியகல் மற்றும் விண்வெளிப் பயணவியல் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு ஒரு பேராசிரியராக பணிபுரிந்தார்.[4] சென்னின் ஆராய்ச்சி பகுதி அணு தொழில்நுட்ப பயன்பாட்டு திட்டத்திற்கு திரும்பியது.
சென் 2016 ஆம் ஆண்டு சூலை 22 அன்று 79 வயதில் நாஞ்சிங்கில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "陈达" (in Chinese). Ministry of Industry and Information Technology of China. http://www.miit.gov.cn/n11293472/n11293877/n14774195/n14774227/14777947.html. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "著名核科学家、中国科学院陈达院士逝世" (in Chinese). Sina. http://news.sina.com.cn/c/2016-07-23/doc-ifxuifip2820711.shtml. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "著名核科学与技术专家 南通籍院士陈达魂归马兰" (in Chinese). zgnt.net இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170105015306/http://www.zgnt.net/content/2016-08/13/content_2477164.htm. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "著名核科学家陈达院士逝世" (in Chinese). Xinhua Net இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160723173049/http://www.js.xinhuanet.com/2016-07/22/c_1119266338.htm. பார்த்த நாள்: 11 October 2016.