உள்ளடக்கத்துக்குச் செல்

செந்நெறிக்காலக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்

செந்நெறிக்காலக் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலக் கிரேக்க மற்றும் ரோமர் காலக் கட்டிடக்கலைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். செந்நெறிக்காலம், பாரசீகப் போர்க் காலம் (கிமு 490-479) தொடங்கி கிபி 500 ஆம் ஆண்டில் ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலப்பகுதிவரை எனக் கருதப்படுகிறது. இச் செந்நெறிக்காலக் கட்டிடக்கலை, கட்டிடக்கலை வரலாற்றில் அதிகமான செல்வாக்குச் செலுத்திய ஒன்று எனலாம். இக் காலக் கட்டிடக்கலையின் அடிப்படையான கூறு, கட்டிடக்கலை ஒழுங்குகள் ஆகும். கிரேக்கக் கட்டிடக்கலையில் மூன்று வகையான ஒழுங்குகள் பயன்பாட்டில் இருந்தன. இவை டொறிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு, கொறிந்திய ஒழுங்கு என்பனவாகும். ரோமர் காலத்தில் மேலும் புதிய இரண்டு ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை தஸ்கன் ஒழுங்கு, கூட்டு ஒழுங்கு என்பன. எனினும் இவை கிரேக்க ஒழுங்குகளான டொறிய மற்றும் கொறிந்திய ஒழுங்குகளின் வேறுபாடுகள் ஆகும்.[1]

கிரேக்கக் கட்டிடக்கலை சிறப்பாக தூண்களையும், வளைகளையும் கொண்ட அமைப்பு முறையிலானது. ரோமர் தமது கட்டிடங்களில் வளைவுகளைப் (arch) பயன்படுத்தி அதன் பயன்பாட்டை முழுமையாக்கினர். அத்துடன் வளைவின் அமைப்பு முறையைப் பயன்படுத்தி வளைகூரை, குவிமாடம் ஆகிய கட்டிடக் கூறுகளையும் அறிமுகப்படுத்தினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Classical architecture