செட்டிபுண்ணியம்
Appearance
செட்டிபுண்ணியம் Chettipunyam | |
---|---|
ஆள்கூறுகள்: 12°45′45″N 80°00′26″E / 12.7626°N 80.0071°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
ஏற்றம் | 86 m (282 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603204 |
அருகிலுள்ள பகுதிகள் | சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | க. செல்வம் |
சட்டமன்ற உறுப்பினர் | ம. வரலட்சுமி |
செட்டிபுண்ணியம் (ஆங்கில மொழி: Chettipunyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°45′45″N 80°00′26″E / 12.7626°N 80.0071°E ஆகும். சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை செட்டிபுண்ணியம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
யோக ஹயக்ரீவர் கோயில் என்றழைக்கப்படும் தேவநாதபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம் பகுதியில் அமைந்துள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CHETTIPUNIYAM Village in KANCHEEPURAM". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
- ↑ "Arulmigu Devanatha Perumal Temple , Chettipuniyam - 603204, Chengalpattu District [TM001844].,HAYAGRIVAR TEMPLE,VARADHARAJAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.