செட்டிகள்ளி ரோசரி தேவாலயம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Shettihalli_Church..jpg/221px-Shettihalli_Church..jpg)
செட்டிகள்ளி தேவாலயம் (Shettihalli Rosary Church) என்பது கர்நாடகாவின் செட்டிகள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில்Shettihalli உள்ளது. இது 1860ஆம் ஆண்டு பிரஞ்சு மிஷனரிகளால், கோத்திக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.[1] 1960களில் ஹேமாவதி அணை கட்டிய பிறகு இத்தேவாலயம் கைவிடப்பட்டது.[2] பருவமழை காலங்களில் நீரில் பாதி மூழ்கிக் காணப்படும் இத்தேவாலயத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இது மூழ்கிய தேவாலயம் அல்லது மிதக்கும் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.[2]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Shettihalli_Rosary_Church_%2C_Hassan_01.jpg/300px-Shettihalli_Rosary_Church_%2C_Hassan_01.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/Frame_in_Frame_-Shettihalli_Rosary_Church_%2C_Hassan_10.jpg/150px-Frame_in_Frame_-Shettihalli_Rosary_Church_%2C_Hassan_10.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/View_from_the_Hemavathi_Reservoir_%2C_Shettihalli_Rosary_Church_%2C_Hassan_03.jpg/200px-View_from_the_Hemavathi_Reservoir_%2C_Shettihalli_Rosary_Church_%2C_Hassan_03.jpg)
காண உகந்த காலம்
[தொகு]இந்த தேவாலயத்தின் முழு அழகைக் காண வருடத்தில் இரு முறை பயணிக்க வேண்டி உள்ளது. ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் நீரில் பாதி மூழ்கி காட்சியளிக்கிறது. டிசம்பர் முதல் மே வரை நீர் வடிந்து முழுத்தோற்றம் காட்சி அளிக்கிறது.
பயண வழி
[தொகு]சாலை வழி: பெங்களூருவில் இருந்து 200 கிமீ தொலைவில் செட்டிகள்ளி உள்ளது. இரயில் வழி : யஷ்வந்பூரிலிருந்து கர்நாடகாவின் காசனுக்கு இரயில் செல்கிறது. காசனில் இருந்து செட்டிகள்ளி 40 கி.மீ தொலைவில் உள்ளது.