சூறாவளி (இதழ்)
Appearance
சூறாவளி என்பது க. நா. சுப்ரமண்யம் ஏப்ரல்’ 1939 இல் தொடங்கிய சிற்றிதழ் ஆகும். மணிக்கொடியில் எழுதி வந்த படைப்பாளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்காகத் தொடக்கப்பட்ட இதழ். இவ்விதழில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் போன்றோர் எழுதினர். பாரதிதாசனின் கவிதைகள் வெளிவந்தன. வசன கவிதையைப் பற்றிய விவாதங்கள் இந்த இதழில் தான் முதன்முதல் வெளிவந்தன. வணிக நோக்கில் இவ்விதழ் வெற்றி பெறவில்லை. கிழமை தோறும் வந்து கொண்டிருந்த இவ்விதழ் 18 இதழ்கள் வந்த பின்[1] செப்டம்பர்’ 1939 இல் நின்றுவிட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. Retrieved 13 நவம்பர் 2021.