சூர் (பஷ்தூன் பழங்குடியினர்)
'சூர் (Sur) என்பவர்கள் கக்கர் இனத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்று பஷ்தூன் பழங்குடியினர் ஆவர். இப்போதுஇவர்கள் முக்கியமாக ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் அரேபியத் தளபதி காலித் இப்னு அல்-வாலித் என்பவரை தங்களின் வம்சாவளியாகக் கூறுகின்றனர். இந்தியாவில் சூர் பேரரசின் நிறுவனர், சேர் சா சூரி சூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கி.பி. 1540 முதல் சூரி பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர். பாரசீக இராணுவத்தின் துணை கொண்டு முகலாயப் பேரரசை மீட்டெடுத்த நசிருதீன் உமாயூனால் கி.பி. 1555 இல் தொடுக்கப்பட்ட சிர்ஹிந்த் போருக்குப் பிறகு இவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.[1]
வரலாறு
[தொகு]ஆப்கானியர்களின் சூரி பழங்குடியினர் பாராவிற்கு கிழக்கே கோர் மலைகளில் வசித்து வந்தனர். கோரே, பெருசி மற்றும் பாமியான் போன்றவை அவர்களின் முக்கிய நகரங்கள் ஆகும். [2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abbas Khan Sarwani (1580). "Táríkh-i Sher Sháhí; or, Tuhfat-i Akbar Sháhí, of 'Abbás Khán Sarwání. CHAPTER I. Account of the reign of Sher Sháh Súr". Packard Humanities Institute. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.
- ↑ Gazetteer of the world or dictionary of geographical knowledge. Vol. 5. London: A Fullerton and Company. p. 61.