சூப்பர்மேன்
சூப்பர்மேன் | |
---|---|
சூப்பர்மேன் 2, #204 (ஏப்ரல் 2004) இதழில் வெளிவந்த சூப்பமேனின் வரைபடம் | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | டீசீ காமிக்ஸ் |
உருவாக்கப்பட்டது | ஜெர்ரி சீகல் ஜோ ஷஸ்டர் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | கால்-எல்/கிளார்க் கெண்ட் |
பங்காளர்கள் | பேட்மேன் வாண்டர் வுமன் |
சூப்பர்மேன் (Superman) என்பது டீசீ காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு வரைகலைக் கதைப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கற்பனை மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். 1938 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோ ஷஸ்டர் என்பவர் இக்கதாபாத்திரத்தை உருவாக்கினார். இதற்கு உறுதுணையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி சீகல் என்பவர் இருந்தார்.[1] இந்தக் கதாப்பாத்திரத்தைக் கொண்டு வரைகலைப் புத்தகங்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
சூப்பர் மேன் நாணயம்
[தொகு]சூப்பர் மேனின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு கனடா அரசு தங்கம், வெள்ளி, நிக்கல் உலோகம் உள்பட 7 வகை நாணயங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர், “கனடா வரலாறு, பாரம்பரியம் போன்றவற்றைக் கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் மேன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல், பண்புகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாணயங்களை வெளியிட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 75-வது பிறந்த நாள்: கனடாவில் "சூப்பர்மேன்' நாணயம் வெளியீடு (தினமணி செய்தி)
- ↑ 75-வது பிறந்த நாள்: கனடாவில் "சூப்பர்மேன்' நாணயம் வெளியீடு (தினமணி செய்தி)
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Golden Age பரணிடப்பட்டது 2019-11-21 at the வந்தவழி இயந்திரம், Silver Age பரணிடப்பட்டது 2019-11-06 at the வந்தவழி இயந்திரம் and Modern Age பரணிடப்பட்டது 2019-11-21 at the வந்தவழி இயந்திரம் Superman at the Comic book database
- Superman on ஐ. எம். டி. பி இணையத்தளம்