உள்ளடக்கத்துக்குச் செல்

சூடோபிலாட்டசு வயநாடென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயநாடு புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
சூடோபிலாட்டசு
இனம்:
சூ. வயநாடென்சிசு
இருசொற் பெயரீடு
சூடோபிலாட்டசு வயநாடென்சிசு
(ஜெர்டன், 1853)[2]
வேறு பெயர்கள் [2]

பைலோமெடுசா? வயநாடென்சிசு ஜெர்டன், 1853
பிலாட்டசு (பிலாட்டசு) வயநாடென்சிசு (ஜெர்டன், 1853)
யாக்லசு வயநாடென்சிசு (ஜெர்டன், 1853)
கிர்தியாக்லசு வயநாடென்சிசு (ஜெர்டன், 1853)

வயநாடு புதர் தவளை, ஜெர்டன் புதர் தவளை, சமவெளி புதர் தவளை, மலபார் கடற்கரை தவளை அல்லது அடர் காது புதர் தவளை என்று அழைக்கப்படும் சூடோபிலாட்டசு வயநாடென்சிசு (Pseudophilautus wynaadensis) என்பது இராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]
பிசுலே மலைத்தொடர்களில் உள்ள சூடோபிலாட்டசு வயநாடென்சிசு
கேரளாவில் குரலெலுப்பும் ஆண்

சூடோபிலாட்டசு வயநாடென்சிசு ஆண்களின் உடல் நீளம் ஆண்களில் 24-28 பெண் தவளையின் நீளம் 27 mm (1.1 அங்) ஆகும். தவளையின் உடல் மெலிந்து காணப்படும். தவளையின் நிறம் மாறுபடும். இந்நிறம் சீரான சாம்பல் நிறத்திலிருந்து பழுப்பு அல்லது சிவப்பு சாம்பல் நிறம் வரை வேறுபடும். செவிப்பறையின் நிறம் மூன்றில் இரண்டு பங்கு அடர் கருப்பு நிறத்தில் உள்ளது. தோள்பட்டை முள் நீட்சியினைக் கொண்டுள்ளது.[3]

பரவல்

[தொகு]

வயநாடு புதர் தவளை மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியான குடகு மற்றும் வயநாடு முதல் பெரியாறு வரை பாலக்காட்டுக் கணவாயின் இருபுறமும் பரவலாகக் காணப்படுகிறது.

வாழிடம்

[தொகு]

சூடோபிலாட்டசு வயநாடென்சிசு வெப்பமண்டல ஈரமான பசுமையான காடுகள் மற்றும் புதர் நிலங்களின் கீழ் நிலப்பகுதியுடன் தொடர்புடையது. இதே போல் இரண்டாம் நிலை காடுகள் மற்றும் பயிரிடப்பட்ட நிலங்களில் (தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் போன்றவை) காணப்படும். இப்பகுதியில் மிகவும் பொதுவான புதர் தவளைகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது வழித்தடத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. இது இரவாடுதல் வகையினைச் சேர்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pseudophilautus wynaadensis". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/58937/0. பார்த்த நாள்: 28 August 2014. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2018). "Pseudophilautus wynaadensis (Jerdon, 1853)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
  3. Biju, S. D.; Bossuyt, Franky (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x.