உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி நிரலாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரலாம்பா சுவாமி
நிரலாம்பா சுவாமி
பிறப்பு(1877-11-19)19 நவம்பர் 1877
சன்னா கிராமன், வங்காளம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு5 செப்டம்பர் 1930(1930-09-05) (அகவை 52)
சன்னா கிராமன், வங்காளம், பிரிட்டிசு இந்தியா
இயற்பெயர்ஜதிந்திசு பிலிசு செவாலி
சமயம்இந்துயிசம்
தத்துவம்அத்வைத வேதாந்தம்
குருசோகம் சுவாமி

சுவாமி நிரலாம்பா (Niralamba Swami) (1877 நவம்பர் 19 - 1930 செப்டம்பர் 5) 1871 மற்றும் 1910 க்கு இடையில் அரவிந்தருடன் வியத்தகு முறையில் முக்கியத்துவம் பெற்ற இரண்டு சிறந்த இந்திய தேசியவாதிகள் மற்றும் சுதந்திர போராளிகளில் ஒருவராவார்.

சுயசரிதை

[தொகு]

நிரலாம்பா சுவாமி ஜதீந்திர நாத் பானர்ஜி என்ற பெயரில் 1877 நவம்பர் 19, அன்று மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கில் உள்ள, கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் சன்னா என்ற கிராமத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை காளிச்சரன் பானர்ஜி வங்காளத்தைச் சேர்ந்த ஜெசோர் மாவட்டத்தின் (இப்போது வடக்கு இருபத்தி நான்கு பர்கானாக்கள் ) அரசாங்கத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இவரது ஆரம்பக் கல்வி கிராமப்புறப் பள்ளியில் இருந்தது. பின்னர் இவர் வர்த்தமான் ராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[3]

சுதந்திரப் போராட்டம்

[தொகு]

கல்லூரியில் படிக்கும் போது, ஜதீந்திர நாத் இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இவர் சுதந்திரம் அடைவதற்கான தீவிரமான மற்றும் புரட்சிகர வழிமுறைகளை நோக்கி ஈர்க்கப்பட்டார்.

சுதந்திரத்தை அடைவதற்கு புரட்சிகர வழிமுறைகள் அவசியம் என்று உணர்ந்த இவர், சுதந்திரத்தை அடைவதற்கு புரட்சிகர வழிமுறைகளை பின்பற்றுவதை முதன்முதலில் பிரசங்கித்தார்.[4][5]

புரட்சிகர முறைகளைப் பயன்படுத்துவதற்கு, ஒரு பெரிய இராணுவம் தேவைப்பட்டது. எனவே நாட்டு மக்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்த ஜதீந்திர நாத் தற்காப்புப் பயிற்சியைத் தேடி தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். இவர் பிரிட்டிசு இராணுவத்தில் சேர முயற்சித்தாலும் வெற்றி பெறவில்லை.

பரோடா

[தொகு]

பிரிட்டிசு இராணுவத்தில் சேரமுடியாத ஜதீந்திர நாத் வேலை தேடி அலையத் தொடங்கினார். இவர் பரோடாவை அடைந்தார். பரோடாவில் இவர் ரவிந்தரைச் சந்தித்தார். அரவிந்தரின் வலுவான உடல்நலத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அரவிந்தர் பரோடா இராணுவத்தில் சேர இவருக்கு உதவினார். 1897 ஆம் ஆண்டில், பரோடா மன்னரின் மெய்க்காப்பாளராக ஜதிந்திர நாத் பரோடா இராணுவத்தில் சேர்ந்தார்.[2][3][6] பின்னர், இவர் அரவிந்தரின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆனார்.

அரவிந்தர் தேசிய நடவடிக்கைகளுக்கு தனது ஆற்றலை அர்ப்பணிக்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் அனுசீலன் சமித்தி உருவானபோது, இந்த அமைப்பில் சேருமாறு அரவிந்தர் ஜதீந்திர நாத் கோரிக்கை வைத்தார். ஜதீந்திர நாத் பரோடாவில் தனது வேலையை விட்டுவிட்டு அனுசீலம் சமிதியில் சேர்ந்து அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானார்.

ஜதீந்திர நாத்தின் தந்தை தனது மகன் தனது படிப்பை விட்டுவிட்டார் என்பதையும், அவர் பிரிட்டிசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதையும் விரும்பவில்லை. குடும்ப விஷயங்களில் தனது மகனின் கவனத்தை திசை திருப்ப, அவர் இவருக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தினார். ஆனால் மேலும் ஜதீந்திர நாத் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார்.

அலிபூர் வெடிகுண்டு வழக்கு மற்றும் வங்காளத்தில் அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளையும் அடக்குவது ஆகியவை இவரது தேசியவாத நடவடிக்கைகளில் ஆர்வத்தை இழக்க நிர்பந்தித்தன. இவர் மீண்டும் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றார். ( சன்னா கிராமம்) பின்னர், இவர் தனது பெற்றோரால் கிரண்மயி என்பவரை மணந்தார்.[7][8]

ஆன்மீக மாற்றம்

[தொகு]

ஆரம்ப அறிகுறி

[தொகு]

இவரது குழந்தைப் பருவத்தில் ஜதீந்திர நாத் பானர்ஜி கட்டுக்கடங்காதவர் என்று அறியப்பட்டார். ஆனால் ஒரு இளைஞனாக அவர் சிந்தனையாளரானார். இவர் அடிக்கடி பிச்சாலாக்சி தெய்வத்தின் கோயிலுக்கு (பிச்சாலட்சுமி ) சென்றுவரத் தொடங்கினார். அங்கு இவர் ஆழ்ந்த சிந்தனையில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.   [ மேற்கோள் தேவை ]

சன்னியாசம்

[தொகு]

வங்காளத்தில் புரட்சிகர நடவடிக்கைகளை அடக்கிய பின்னர், ஜதீந்திர நாத் மீண்டும் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றார். இவரது மனம் ஆன்மீக எண்ணங்களில் மூழ்கியது. இவர் அடிக்கடி பிச்சாலாட்சி கோயிலுக்கு சென்று பல மணி நேரம் அங்கேயே இருப்பார். ஆன்மீக வலிமை சுய சுத்திகரிப்பு மற்றும் ஆன்மீக அறிவுக்காக இவர் ஜெபிப்பார். ஒரு குருவின் அவசியத்தை இவர் உணரத் தொடங்கினார். இதற்கிடையில், இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இவருக்கு ஒரு மகள் பிறந்தார். உலக உறவுகளிலிருந்து விடுபட ஆழ்ந்த தேவையை இவர் உணர்ந்தார். இதன் விளைவாக, ஒரு இரவு இவர் துறவியாக சன்னியாசம் மேற்கொண்டார்.[5][9]

ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு தனக்கு ஒரு குருவின் உதவி தேவை என்று ஜதீந்திர நாத் உணர்ந்து அவ்வாறு ஒருவரைத் தேடத் தொடங்கினார். குருவைத் தேடி பல இடங்களில் அலைந்தார். ஆனால் உண்மையானவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அலைந்து திரிதல்

[தொகு]

இவர் குருவைத்தேடி அலைந்து திரிந்தபோது வாரணாசியை அடைந்தார். அங்கு ஜதீந்திர நாத் ஒரு துறவியைச் சந்தித்தார். அவர் இவரை நைனித்தாலுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார், அங்கு இவர் தனக்கான குருவைக் கண்டுபிடித்தார்.

நைனித்தால்

[தொகு]

ஜதீந்திர நாத் வாரணாசியில் இருந்து நைனித்தாலை அடைந்தபோது மிகவும் சோர்வடைந்திருந்தார். ஆயினும் இவர் தனது விதிக்கப்பட்ட குருவான சோகம் சுவாமியைக் கண்டுபிடிக்க முடிந்தது.[10] சோகம் சுவாமி ஒரு ஆற்றின் கரைக்கு அருகில் ஒரு ஆசிரமத்தை நிறுவியிருந்தார். அவர் ஜதீந்திர நாத்தை வரவேற்று அதே நாளில் தனது சீடராக்கினார்.

சோகம் சுவாமி இந்தியாவின் புகழ்பெற்ற யோகியான திபெத்திபாபாவின் மிகச் சிறந்த சீடர்களில் ஒருவராவார்.[11] 'சோக்ம் கீதை', 'சோகம் சம்கிதா', 'உண்மை' போன்ற புத்தகங்களை எழுதியவர் ஆவார்.

"ஏன் நான் ஒரு நாத்திகர்" என்ற தனது சுயசரிதை படைப்பில், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், நிரலாம்பா சுவாமியை காமன் சென்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். சுவாமி உண்மையில் அதன் அறிமுகத்தை மட்டுமே எழுதினார்.[12][13][14][15]

அரித்துவார்

[தொகு]

சோகம் சுவாமி ஜதீந்திர நாத் பானர்ஜியை ஒரு ஆசிரமத்தை நிறுவ அரித்துவார் செல்லச் சொன்னார். இந்த இடத்தில் ஜதீந்திர நாத் ஆன்மீகத்தில் உயரத் தொடங்கினார். இறுதியாக பிரம்மம் அல்லது கடவுளைப் பற்றிய அறிவை வடிவத்தில் பெற்றார்.

ஜதீந்திர நாத் பானர்ஜியின் ஆன்மீக வெற்றியில் சோகம் சுவாமி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனவே இவர் ஸ்ரீமத் நிரலாம்பா சுவாமி என்ற மறுபெயரிடப்பட்டார். ஆனால் இவர் நிரலாம்பா சுவாமி என்ற பெயரிலேயே பிரபலமானார்.[16]

நிரலாம்பா சுவாமிக்கு இப்போது பஞ்சாப், அரியானா மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல பக்தர்கள் இருக்கின்றனர். ஆன்மீக அறிவு மற்றும் ஞானத்திற்கான இவரது புகழ் வெகு தொலைவிற்கும் பரவியது. சில ஆண்டுகள் அரித்வாரில் தங்கிய பின்னர் சன்னா கிராமத்தில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்.

சன்னா கிராமம்

[தொகு]

பல ஆண்டுகளாக வட இந்தியாவில் தங்கிய பின்னர், நிரலாம்பா சுவாமி தனது சொந்த ஊரான சன்னா கிராமத்தை அடைந்தார். இவரது கிராமம் மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்களைச் சேர்ந்த பலர் இவரை பார்க்க கூடிவந்தனர். அவர் தனது மனைவியைச் சந்திக்க முதலில் தனது வீட்டிற்குச் சென்றார். இவரது ஒரே மகள் இறந்து போனதை அறிந்து கொண்டார். கிராமத்தில் விரைவில் ஆசிரமம் கட்டப்படவுள்ளதாகவும் தனது வாழ்நாள் முழுவதையும் தன்னுடன் செலவிடுமாறு இவர் தனது மனைவியை சமாதானப்படுத்தினார். அவர் 'சின்மயீ தேவி' என்று மறுபெயரிடப்பட்டார்.[17]

விரைவில் கிராம நதிக் கரையோரத்தில் ஒரு ஆசிரமம் கட்டப்பட்டது. நிரலாம்பா சுவாமி தனது மனைவி மற்றும் சில பக்தர்கள் மற்றும் சீடர்களுடன் ஆசிரமத்தில் தங்கத் தொடங்கினார்.

ஒரு சிறந்த குருவாகவும், யோகியாகவும் நிரலாம்பா சுவாமியின் புகழ் இந்தியாவில் பரவியது. ஆசிரமத்தில் இவரது வாழ்க்கை ஒரு 'போகி' (ரசிப்பவர்) மற்றும் ஒரு யோகியாக கழிந்தது. அந்த நேரத்தில் கிடைக்கும் சிறந்த தரமான வெற்றிலை மற்றும் புகையிலை ஆகியவற்றை இவர் தினமும் உட்கொள்வார்.

முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் இந்தியாவின் பிரபலமான யோகியாக மாறிவிட்டார் என்பது தெரியவில்லை. நிரலாம்பா சுவாமியின் பல முன்னாள் தோழர்கள் (முன்னர் ஜதீந்திர நாத் பானர்ஜி) மற்றும் பல சுதந்திர போராளிகள் ஆன்மீக வழிகாட்டுதலுக்காகவும் உத்வேகத்துக்காகவும் இவரைப் பார்க்கத் தொடங்கினர்.

நிரலாம்பா சுவாமியைப் பார்வையிட்ட குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராளிகளில் புகழ்பெற்ற பகத்சிங்கும் ஒருவர். அவர் 1929 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன்னா கிராமத்தில் சன்னா ஆசிரமத்தில் நிரலாம்பா சுவாமியைச் சந்தித்தார் [18] (சிலரின் படி 1927– 1928).

நிரலாம்பா சுவாமியுடன் தொடர்புடைய மற்றொரு பிரபலமான நபர் பிரஜனபாதா (1891-1974). அவர் சுவாமி பிரஜனபாதா என்ற பெயரில் பிரபலமாக இருந்தார். அவர் 1924-25ல் சன்னா ஆசிரமத்தில் நிரலாம்பா சுவாமியின் சீடரானார். அவரும் ஒரு துறவி ஆனார்.[19] பிரஜனபாதா அத்வைத வேதாந்த தத்துவத்தைப் பின்பற்றுபவர் மற்றும் ஜன யோகா முறையைப் பயன்படுத்தி அறிவைப் புரிந்துகொள்வதைக் கற்பித்தார் (அறிவைப் பயன்படுத்தி சுய-உணர்தல் பாதை).  

நிரலாம்பா சுவாமியை சன்னா கிராமத்தில் உள்ள அவரது சன்னா ஆசிரமத்தில் பல புகழ்பெற்ற நபர்கள் பார்வையிட்டனர். அவர்களில் திபெத்திபாபாவும் இருந்தார். ஆதிசங்கரருக்குப் பிறகு அத்வைத வேதாந்தத்தின் மிகப் பெரிய தலைவராக திபெட்டிபாபாவை நிரலாம்பா சுவாமி பாராட்டியிருந்தார்.

நிரலாம்பா சுவாமி1930 செப்டம்பர் 5, அன்று இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Sen, Siba Pada, "Dictionary of national biography", Institute of Historical Studies, India (edition 1972). p.114. Page available:
  2. 2.0 2.1 University of Burdwan Dept. of History, "History: journal of the Department of History”, University of Burdwan, India. (edition 1998). p. 85. Page available:
  3. 3.0 3.1 Durga Das Pvt. Ltd, "Eminent Indians who was who, 1900–1980, also annual diary of events", Durga Das Pvt. Ltd., India. (edition 1985). p.25. Page available:
  4. "Burdwan: History and Background", District Gazetter, Burdwan.
  5. 5.0 5.1 Jadavpur University. Dept. of International Relations Jadavpur Journal of International Relations, "Jadavpur Journal of International Relations", Dept. of International Relations, Jadavpur University, Kolkata, India. (edition: 2001). pp.117 and 122. Page Available:
  6. Municipal Corporation, Calcutta (India), "Calcutta municipal gazette", Office of the Registrar of Newspapers. Press, India (edition: 1972). p.127.
  7. Chakravorty, Subodh, "Bharater Sadhak – Sadhika"(Bengali edition), India: Kamini Publication, 115, Akhil Mistry Lane, Kolkata – 700 009 (1997.Bengali calendar year – 1404), Volume 1, p.516
  8. Jatindra Nath Banerjee (Niralamba Swami)
  9. University, Banaras Hindu, "Prajña", Banaras Hindu University, Benaras, India (edition: 1972). p.110. Page Available:
  10. Heehs, Peter, "The bomb in Bengal: the rise of revolutionary terrorism in India, 1900–1910”, Oxford University Press. (edition 1993). p. 62. Page available:
  11. Sharma, I. Mallikarjuna, "In retrospect: Sagas of heroism and sacrifice of Indian revolutionaries”, Ravi Sasi Enterprises, India (edition: 1999). p. 94. Page Available
  12. '‘Why I am an Atheist: Bhagat Singh, People's Publishing House, New Delhi, India. Page available: "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 23 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  13. [1]
  14. Swami, Soham, "Common Sense", Bangladesh: Surja Kanta Banerjee, Gandharia Press, Dacca (Dhaka) (1928). pp. 1–3.
  15. Luzac & Co. (London, England), “Luzac's oriental list and book review”, Luzac and Co. (edition 1924). p. 33. Page available:
  16. Majumdar, Bimanbehari, "Militant nationalism in India and its socio-religious background, 1897–1917", General Printers & Publishers, India (edition 1966. p.101. Page available:
  17. Motherandsriaurobindo.org
  18. Jatinder Nath Sanyal, Kripal Chandra Yadav, Bhagat Singh, Babar Singh, The Bhagat Singh Foundation, "Bhagat Singh: a biography”, Hope India Publication, India (edition: 2006). p.84. Page Available:
  19. Prajnanapada, Ramanuja Srinivasan, "Talks with Swami Prajnanapada", Vidya Bhavan, India (edition 1977). Page available:

மேற்கோள்கள்

[தொகு]
  • Chakravorty, Subodh, "Bharater Sadhak – Sadhika"(Bengali edition), India: Kamini Publication, 115, Akhil Mistry Lane, Kolkata – 700 009 (1997.Bengali calendar year – 1404), Volume 1, pp. 500–522
  • Grover, G.L. & Grover, S., A New Look At Modern Indian History (17th ed.), India: S. Chand Publication (2000). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0532-X, pp. 283–284.
  • Sanyal, Jagadiswar, Guide To Indian Philosophy (1996 ed.), India: Sribhumi Publishing Company (1999), 79, Mahatma Gandhi Road, Kolkata – 700 009.
  • Hornby, A S, "Oxford Advanced Learner's Dictionary of Current English" (5th ed.), UK: Oxford University Press (1998). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-431445-6, pp. 1433–175.
  • Why I am an Atheist: Bhagat Singh, People's Publishing House, New Delhi, India.
  • Sharma, I. Mallikarjuna, “In retrospect: Sagas of heroism and sacrifice of Indian revolutionaries”, Ravi Sasi Enterprises, India (edition: 1999). p. 94.
  • Swami, Soham, "Common Sense", Bangladesh: Surja Kanta Banerjee, Gandharia Press, Dacca(Dhaka) (1924). pp. 1–3
  • Municipal Corporation, Calcutta (India), “Calcutta municipal gazette”, Office of the Registrar of Newspapers. Press, India (edition: 1972). p. 127.
  • Jatinder Nath Sanyal, Kripal Chandra Yadav, Bhagat Singh, Babar Singh, The Bhagat Singh Foundation, “Bhagat Singh: a biography”, Hope India Publication, India (edition: 2006). p. 84.
  • University, Banaras Hindu, “Prajña”, Banaras Hindu University, Benaras, India (edition: 1972). p. 110.
  • Jadavpur University. Dept. of International Relations Jadavpur Journal of International Relations, “Jadavpur Journal of International Relations”, Dept. of International Relations, Jadavpur University, Kolkata, India. (edition: 2001). pp. 117 and 122.
  • Indian Bibliographic Centre. Research Wing, Indian Bibliographic Centre
  • “Dictionary of Indian biography”, Indian Bibliographic Centre (edition 2000). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85131-15-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85131-15-3. p. 32.
  • Durga Das Pvt. Ltd, “Eminent Indians who was who, 1900–1980, also annual diary of events”, Durga Das Pvt. Ltd., India. (edition 1985). p. 25.
  • Sen, Siba Pada, “Dictionary of national biography”, Institute of Historical Studies, India (edition 1972). p. 114.
  • Mukherjee, Uma, “Two great Indian revolutionaries: Rash Behari Bose & Jyotindra Nath Mukherjee”, Firma K. L. Mukhopadhyay. (edition 1966). p. 101.
  • University of Burdwan Dept. of History, “History: journal of the Department of History”, University of Burdwan, India. (edition 1998). p. 85.
  • Heehs, Peter, “The bomb in Bengal: the rise of revolutionary terrorism in India, 1900–1910”, Oxford University Press. (edition 1993). p. 62.
  • Gupta, Gopal Dass, “Glossary and index of proper names in Sri Aurobindo's works”, Sri Aurobindo Ashram, India. (edition 1989). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7058-170-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7058-170-3. p. 34
  • Majumdar, Bimanbehari, “Militant nationalism in India and its socio-religious background, 1897–1917”, General Printers & Publishers, India (edition 1966. p. 101.
  • Luzac & Co. (London, England), “Luzac's oriental list and book review”, Luzac and Co.. (edition 1924). p. 33.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நிரலாம்பா&oldid=3480224" இலிருந்து மீள்விக்கப்பட்டது