சுவாமி இராமதாசர்
இந்த கட்டுரை அல்லது கட்டுரையின் சில பகுதியோ விக்கிபீடியாவின் பதிப்புரிமை கொள்கையை மீறும் ஒரு மூலத்திலிருந்து நகலெடுத்து ஒட்டப்பட்டிருக்கலாம். இலவசமில்லாத பதிப்புரிமை பெறாத உள்ளடக்கத்தை அகற்றுவதன் மூலமோ அல்லது இலவச உள்ளடக்கத்தை சரியாகக் குறிப்பிடுவதன் மூலமோ இந்தக் கட்டுரையினை திருத்தி விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு உதவலாம். அல்லது நீக்குவதற்கான கோரிக்கை விடுக்கலாம். இதில் பதிப்புரிமை மீறல் என்பது விக்கிபீடியா கண்ணாடியின்கீழ் வரவில்லை என்பதனை உறுதி செய்யவும். |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தமிழவேள் சுவாமி இராமதாசர் (இயற்பெயர்:இராமலிங்கம், பிறப்பு ஓகஸ்ட் 7, 1916) மலேசியா வாழ் தமிழ்மக்களுக்கு ஆதரவு காட்டி, தமிழைப் போதித்த செந்தமிழ் வித்தகர். புலவர். இவர் ஒரு பேரறிஞராகக் கருதப்படுகிறார்.[1]
வாழ்வு
[தொகு]இவர் தமிழகம், முகவை மாவட்டம், திருவரங்கம் அருகில் கொளுந்துறை கிராமத்தில் இறைதொண்டர் குடும்பத்தில் பிறந்தவர். பழனியாண்டி, பெருமாத்தாள் தம்பதிகளின் மகன்.
கல்வி
[தொகு]இவர் தனது இரண்டு வயதிலேயே இவரது பாட்டனார் சின்னழகரிடமிருந்து பள்ளிப் பிள்ளையார் சிந்தனை, சரசுவதி சிந்தனை, மூதுரை தெய்வத் தனிப்பாடல்கள், சிறுகதைகள் போன்றவற்றைக் கற்றவர். 1919 ஆம் ஆண்டில் கொளுந்த்துறை கிராமத்தில் போஃர்ட் பாடசாலையில் படிக்கத் தொடங்கியவர், போஃர்ட் பாடசாலை தொடர்ந்து இயங்காக காரணத்தால் மீண்டும் தனது பாட்டனாரிடமே வாய்மொழியாக கல்வியைத் தொடர்ந்தவர். இவர் தனது பத்தாவது வயதிலேயே மூதுரை, நல்வழி, நன்னெறி, இராஜகோபாலமாலை, அம்பிகைமாலை, நீதி நெறி விளக்கம், மாரியம்மன் தாலாட்டு, நாராயண சதகம், அறப்பளீச்சுர சதகம் போன்றவைகளைக் கற்றுத் தெளிந்திருந்தவர். போஃர்டு பாடசாலை மீண்டும் ஆரம்பமான போது இவர் மூன்றாம் வகுப்பில் சேர்ந்து, கல்வியைத் தொடர்ந்தவர். [2]
கற்ற வித்தைகள்
[தொகு]1930 இல் திருவரங்கம் பாடசாலையில் இளையான் குடியெடுத்த சேதுகுடி இராமசாமி வள்ளுவரிடமும், கருமுத்து வள்ளுவரிடமும் சோதிடக் கலையையும், பஞ்ச பட்சி வித்தையையும் கற்றுக் கொண்டவர். [3]
பெயர் மாற்றம்
[தொகு]இவர் 1937 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'ரஜூலா' கப்பலில் பயணம் செய்து பினாங்கு சென்றார். பினாங்கில் இவருக்கு அறிமுகமானவர்கள், 'இராமதாசன்' எனும் பெயர் இவருக்கு பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதாகச் சொல்லி அதையே இவருக்கு வைத்து விட்டனர். அன்று முதல் இவரது பெயர் இராமதாசர் என மாறியது.
வேலை
[தொகு]சுவாமி இராமதாசர் பெப்ரவரி 10, 1937 இல் கப்பல் துறையில் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் தண்ணீர் மலைச்சாரலில் கல் ஆலையில் இருபது நாட்கள் வேல செய்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக இரு வேலைகளிலிருந்தும் விலக்கப் பட்டார்.
பணிகள்
[தொகு]இவர் பினாங்கு மாநிலத்தில் 1939 ஆம் ஆண்டு தொடக்கம் செந்தமிழ்ப் பாடசாலையையும், செந்தமிழ்க் கலாநிலையத்தையும் தொடங்கி இலக்கண இலக்கிய வகுப்புகளை நடாத்தி வந்தவர். 1943 ஆம் ஆண்டில் பினாங்கு கம்போங் ஜாவா பாரு இராச மாரியம்மன் கோயிலை விரிவுபடுத்திச் செப்பனிட்டு பெரிய சிறிய மாணவர்களுக்குக் கல்வி புகட்டியவர். இளந் தமிழ்ப்பாடசாலை, கலா நிலையம் என்ற இரண்டு பிரிவுகளை ஏற்படுத்தி இலக்கிய, இலக்கணப் பாடங்களைக் கற்பித்தவர்.[4]
சமுதாயச் சேவை
[தொகு]இவர் தமிழ்ச் சமூக நலன்களுக்காகப் பல்வேறு துறைகளிலும் தொண்டு புரிந்தவர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- பினாங்கின் கதை 8 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- சுவாமி இராமதாசரின் செந்தமிழ்க் கலா நிலையம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா| தினமணி| மார்ச் 19, 2013
- முதுதமிழ்ப் பெரும்புலவர் தவத்திரு. சுவாமி இராமதாசர் அவர்களின் 60 - ஆம் ஆண்டு மணி விழா மலர்
- Cillar̲aik kōvai
- முதுதமிழ்ப் பெரும்புலவர் தமிழவேள் சுவாமி இராமதாசர்
உசாத்துணை
[தொகு]- ↑ "தமிழவேள் சிவாமி இராமதாசர்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-11-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-11-04.
- ↑ மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் சோலை-இருசன் (சங்கொலி)
- ↑ முரசு நெடுமாறன், 2005