உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 06°11′40″N 100°24′03″E / 6.19444°N 100.40083°E / 6.19444; 100.40083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் அப்துல் அலிம்
வானூர்தி நிலையம்
Sultan Abdul Halim Airport
சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: AOR
  • ஐசிஏஓ: WMKA
    Sultan Abdul Halim Airport is located in மலேசியா
    Sultan Abdul Halim Airport
    Sultan Abdul Halim Airport
    சுல்தான் அப்துல் அலிம்
    வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது / இராணுவம்
உரிமையாளர்கசானா நேசனல்
Khazanah Nasional
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுஅலோர் ஸ்டார்
அமைவிடம்கெப்பாலா பத்தாஸ், அலோர் ஸ்டார், கெடா, மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL15 ft / 5 m
ஆள்கூறுகள்06°11′40″N 100°24′03″E / 6.19444°N 100.40083°E / 6.19444; 100.40083
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 2,745 9,006 தார்
புள்ளிவிவரங்கள் (2018)
பயணிகள் போக்குவரத்து817,253 (Increase 1.9%)
சரக்கு (டன்கள்)845 (Increase 72.7%)
வானூர்தி போக்குவரத்து44,989 ( 2.8%)

சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம் அல்லது அலோர் ஸ்டார் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: AORஐசிஏஓ: WMKA); (ஆங்கிலம்: Sultan Abdul Halim Airport அல்லது Alor Setar Airport; மலாய்: Lapangan Terbang Sultan Abdul Halim) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார் மாநகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1]

இந்த வானூர்தி நிலையம், கெடா; அலோர் ஸ்டார் வாழ் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. அலோர் ஸ்டார் நகர மையத்தில் இருந்து 15 கி.மீ. (9.3 மைல்) தொலைவில் கெப்பாலா பத்தாஸ் எனும் சிறுநகரில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

பெர்லிஸ் மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதன் சிறிய புவியியல் அளவு காரணமாக, ஒட்டுமொத்தப் பெர்லிஸ் மாநிலத்திற்கும் சேவை செய்கிறது. இந்த நிலையம் தீபகற்ப மலேசியாவின் மிக வடக்கே இருப்பதால் சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.

வடக்கு மலாயாவிற்கான விமானங்கள், குறிப்பாக கிழக்கு மலேசியாவின் சபா , சரவாக் மாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை பிரதான நுழைவாயிலாகப் பயன்படுத்துகின்றன.

வரலாறு

[தொகு]

இந்த வானூர்தி நிலையம் 1929-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தீபகற்ப மலேசியாவில் தைப்பிங் வானூர்தி நிலையத்திற்கு (Taiping Airport) அடுத்து 2-ஆவது பழமையான வானூர்தி நிலையமாகும்.

இது ஒரு சிறிய வானூர்தி நிலையம். இருப்பினும் ஓர் ஆண்டில் 800,000 பயணிகளைக் கையாளும் திறன்பாடு இந்த நிலையத்திற்கு இப்போது உண்டு. எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2006 மே மாதம் 5-ஆம் தேதி ஒரு புதிய முனையம் உருவாக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையம் 42,264 வானூர்தி இயக்கங்களுடன் (aircraft movements) 919,875 பயணிகளைக் கையாண்டது.

அரச மலேசிய விமானப்படை

[தொகு]

கெடா மாநிலத்தின் 27-ஆவது ஆட்சியாளரான தற்போதைய கெடா சுல்தானின் பெயரால் இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.[2]

அரச மலேசிய விமானப்படை தளத்தின் பயிற்சிப் பிரிவு (Royal Malaysian Air Force Base) இங்குதான் உள்ளது. அரச மலேசிய விமானப்படையின் விமானிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் சிறிய அளவிலானது. உள்நாட்டு விமானங்களை மட்டுமே கையாளுகிறது. இருப்பினும், ஏர்பஸ் (Airbus A330) போன்ற பெரிய வானூர்திகளைத் தரை இறக்கும் திறனைப் புதிய முனையம் கொண்டுள்ளது.

ஓடுபாதை

[தொகு]
  • முந்தைய ஓடுபாதையின் நீளம் 1,963 மீ; அகலம் 45 மீ (6,440 அடி × 148 அடி.
  • இப்போதைய ஓடுபாதையின் நீளம் 2,745 மீ; அகலம் 45 மீ (9,006 அடி × 148 அடி.

வானூர்திச் சேவைகள்

[தொகு]
சேவைகள் சேரிடங்கள்
ஏர்ஏசியா செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஜொகூர் பாரு); கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்)
பயர்பிளை சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்)
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்)
மலின்டோ ஏர் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்)

புள்ளிவிவரங்கள்

[தொகு]
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு
பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 353,778 17 18,318
2004 346,502 2.0 67 Increase294.1 14,784 19.3
2005 323,669 6.6 118 Increase76.1 17,632 Increase 19.2
2006 292,549 9.6 111 5.9 18,495 Increase 4.9
2007 291,006 0.5 55 50.4 20,277 Increase 9.6
2008 307,564 Increase5.7 41 25.4 17,705 12.7
2009 421,314 Increase36.9 34 17.1 24,031 Increase 35.7
2010 400,997 4.8 34 22,187 7.7
2011 407,717 Increase1.7 46 Increase35.3 19,621 11.6
2012 433,644 Increase6.4 123 Increase167.4 18,006 8.2
2013 535,073 Increase23.4 126 Increase2.3 15,752 12.5
2014 660,264 Increase 23.4 230 Increase 82.4 17,365 Increase 10.2
2015 719,029 Increase 8.9 389 Increase 69.0 18,368 Increase 5.8
2016 787,706 Increase 9.6 390 Increase 0.3 18,190 1.0
2017 802,304 Increase 1.9 489 Increase 25.4 46,285 Increase 154.5
2018 817,253 Increase 1.9 845 Increase 72.7 44,989 2.8
2019 919,875 Increase 12.6 1,009 Increase 19.3 42,264 6.1
2020 275,824 70.0 280 72.2 33,367 21.1
மூலம்: மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்[3]

இலக்குகள்

[தொகு]
சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையத்திலிருந்து பன்னாட்டு வானூர்திகள்
தரவரிசை இலக்குகள் நிகழ்வுகள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1 கோலாலம்பூர்–சுபாங் 32 FY, OD
2 கோலாலம்பூர்–சிப்பாங் 19 AK, MH
3 ஜொகூர் பாரு 4 AK

மேற்கோள்கள்

[தொகு]
  1. WMKA - ALOR STAR/SULTAN ABDUL HALIM பரணிடப்பட்டது 2013-10-07 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. "The airport is named after the current Sultan of Kedah who is the 27th ruler since the sultanate was first established in 1136. The airport is small and only handles domestic flights as well as being home to the training division of the Royal Malaysian Air Force Base". FlightMalaysia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 May 2022.
  3. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). Malaysia Airports. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க

[தொகு]