உள்ளடக்கத்துக்குச் செல்

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 (Environment Protection Act, 1986) என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்திய பாராளுமன்றம் இயற்றிய ஒரு சட்டமாகும். போப்பால் நச்சுவாயு[1] நிகழ்வுக்குப் பிறகு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு 253 ஆவது பிரிவின் கீழ் இச்சட்டம் மார்ச்சு 1986 இல் இயற்றப்பட்டு 19 நவம்பர் 1986 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மனிதர்களுடன் தொடர்புடைய சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது இச்சட்டத்தின் நோக்கமாகும். பாதுகாப்பு மற்றும் மனிதச் சூழலின் பாதுகாப்பானது தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பு முன்னேற்றம் ஆபத்துத் தடுப்பு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டது. .

வரையறைகள்

[தொகு]

1.சுற்றுப்புறச்சூழல்: காற்று, நீர் மற்றும் நிலமும் அவைகளுக்குள் உள்ள பிணைப்பும் அவை மனிதனோடும், பிற உயிரினங்களோடும் கொண்டுள்ள பிரிக்கமுடியாத உறவையும் சுற்றுச்சூழல் எனக் கூறலாம்.

2.மாசு: சுற்றுச்சூழலுக்குத் தீமையை விளைவிக்கக் கூடிய எந்த ஒரு திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களும் மாசு ஆகும்.

3.அபாயகரமான பொருட்கள்: எந்த ஒரு பொருளும், அவற்றின் வேதியியல் மற்றும் இயற்பியல் குணநலன்களின் பொருட்டு, மனிதனுக்கோ பிற உயிரினங்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ அபாயத்தை விளைவித்தால் அப்பொருளை அபாயகரமான பொருள் எனக் கணிக்கலாம்.

4.சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்றவும், மேம்படுத்தவும் , மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாராங்கள்.

5.மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புகளைப் பற்றியது ஆகும்.

6.இப்பிரிவின்படி சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை பிற சட்டத்திற்கு விரோதமாக இருப்பின் குற்றத்திற்கான தண்டனையைப் பிற சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும். முன்மொழியப்பட்ட இத்தகைய சில திருத்தங்கள் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் வலிமையைக் குறைக்கிறது [2],

மத்திய அரசின் அதிகாரங்கள்

[தொகு]

1.சுற்றுப்புறச்சூழல் மாசைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவில் திட்டங்கள் தீட்டவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

2.சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும், தடுக்கவும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

3.புகை மற்றும் கழிவுகள் வழியாக வெளிப்படும் மாசுக்களின் அளவுகளை நிர்ணயம் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

4.சுற்றுச்சூழல் மாசு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தண்டனைகள்

[தொகு]

சட்டத்தை மீறினால் (1)5 ஆண்டு சிறைவாசம் அல்லது 1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இவ்விரண்டும் (2) தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]