சுரேந்திர பால் சிங்
சுரேந்திர பால் சிங் Surendra Pal Singh | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962–1977 | |
முன்னையவர் | இரகுபர் தயாள் மிசுரா மற்றும் கே.எல். பால்மீகி |
பின்னவர் | மகமூத் அசன் கான் |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | மகமூத் அசன் கான் |
பின்னவர் | சர்வார் உசேன் |
தொகுதி | புலந்த்சகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பகன்பூர், புலந்தசகர் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு உத்தரப் பிரதேசம், இந்தியா) | 17 மே 1917
இறப்பு | 10 திசம்பர் 2009 புலந்த்சாகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 92)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சுரேந்திர பால் சிங் (Surendra Pal Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு விவசாயவாதியான இவர் மத்திய அரசாங்க அமைச்சராக இருந்தார். [1] கர்னல் பிரவுன் கேம்பிரிட்ச்சு பள்ளி மற்றும் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.
கோட்டை, உச்சகான்[தொகு]
1927 ஆம் ஆண்டில், தனது 10-ஆவது வயதில், உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகரில் உள்ள உஞ்சகானில் உள்ள கோட்டையை அவர் பெற்றார். [2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
சுரேந்திர பால் சிங் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். புலந்த்சாகரில் இருந்து 4 ஆவது, 5 ஆவது மற்றும் 8ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
இறப்பு[தொகு]
தனது 92-ஆவது வயதில் 2009 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று புலந்த்சாகரில் சுரேந்திர பால் சிங் இறந்தார். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Lok Sabha Debates (Third Session, Fifteenth Lok Sabha)". Lok Sabha Debates 3 (34): 9–10. 18 December 2009. https://eparlib.nic.in/bitstream/123456789/758405/1/1812_III.pdf. பார்த்த நாள்: 1 October 2022.
- ↑ "The Fort Unchagaon". பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.