உள்ளடக்கத்துக்குச் செல்

சுமிதா பட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமிதா பட்டீல்
2013 ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல்தலையில்
பிறப்பு(1955-10-17)17 அக்டோபர் 1955
பூனே, மும்பை, இந்தியா[1][2]
இறப்பு13 திசம்பர் 1986(1986-12-13) (அகவை 31)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
குழந்தை பிறப்பு சிக்கல்கள்
தேசியம்இந்தியன்
பணிநடிகை, செய்தி வாசிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1974–1986 (இறப்பு)
பெற்றோர்சிவாஇராவ் கிரிதர் பட்டீல்
வித்யாதை பட்டீல்
வாழ்க்கைத்
துணை
ராஜ் பாபர்
பிள்ளைகள்பிரதீக் பாபர்

சுமிதா பட்டீல் (அக்டோபர் 7,1955[1] – டிசம்பர் 13,1986) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் இருந்த மேடை மற்றும் திரைப்பட நடிகைகள் மத்தியில் இவரது பங்கு மிகச்சிறப்பாக இருந்தது [3] இவர் இந்தி மற்றும் மராத்திய மொழியில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] அவரது தொழில் வாழ்க்கையில், பிலிம்பேர் விருது[5] மற்றும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றுள்ளார்.

சுமிதா படீல் புனே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். சியாம் பெனகல் இயக்கத்தில் சரந்தா சோர் (1975) என்ற படத்தில் இவர் அறிமுகமானார்.

இவர் திரைப்படங்களில் பல்வேறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்தார். இவரது நடிப்பில் மந்த்தன் (1977),[1] பூமிகா (1977),[1] ஆக்ரோஷ் (1980 ),[7] (1981), சிதம்பரம் (1985), மிர்ச் மசாலா (1985)[1][3] ஆகிய கதாபாத்திரங்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவையாகும்..

நடிப்பை தவிர, படீல் ஒரு பெண்ணியவாதியாகவும், மும்பையில் உள்ள மகளிர் மையத்தில் உறுப்பினராகவும் இருந்தார். பெண்களின் பிரச்சினைகளை களைவதற்கு அவர் மிகவும் உறுதியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய சமுதாயத்தில் பாரம்பரிய பெண்களின், மற்றும் நகர்ப்புற சூழலில் நடுத்தர வர்க்க பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை சார்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.[8]

இவ ராஜ் பாபர் என்னும் நடிகரை மணந்தார். சுமீதா படீல் தனது 31ம் வயதில் (13 திசம்பர் 1986) பேறுகாலத்தில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக இறந்தார். அவர் நடித்த பத்து படங்கள் அவரது இறப்பிற்கு பின் வெளியிடப்பட்டன. அவரது மகன் பிரதீக் பாபரும் திரைப்பட நடிகராக 2008 இல் அறிமுகமானார்.

இளமைப்பருவம்

[தொகு]

சுமிதா பட்டீல், மகாராட்டிரம், புனேயில் பிறந்தார். இவரது தந்தை சிவாஜிராவ் கிரிதர் பட்டீல் - மகாராஷ்டிர அரசியல்வாதி இவரின் தாய் வித்யாதை பட்டீல் ஒரு சமூக சேவகி ஆவார். இவர் ரேணுகா ஸ்வரூப் நினைவு உயர் நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். மும்பை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக 1970 ஆம் வருடம் பணியில் சேர்ந்தார்.[9]

தொழில்

[தொகு]

சுமிதா பட்டீல் 1970 களில் நடித்த ஷபனா ஆஷ்மி போன்ற நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியவர். அவர் புகழ் பெற்ற இயக்குனர்களான சியாம் பெனகல், கோவிந்த் நிகாலினி மற்றும் சத்யஜித் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடித்தார். அதே சமயம், மற்ற வர்த்தக ரீதியான படங்களிலும் நடித்தார். இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். சிறந்த புகைப்பட வல்லுனராகவும் இருந்தார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Subodh Kapoor (1 July 2002). The Indian Encyclopaedia: Biographical, Historical, Religious, Administrative, Ethnological, Commercial and Scientific. Indo-Pak War-Kamla Karri. Cosmo Publication. pp. 6699–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-257-7. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
  2. D. Sharma (1 January 2004). Mass Communication : Theory & Practice In The 21St Century. Deep & Deep Publications. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-507-9. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
  3. 3.0 3.1 Lahiri, Monojit (20 December 2002). "A blazing talent remembered". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031003193833/http://www.hindu.com/thehindu/fr/2002/12/20/stories/2002122001290500.htm. பார்த்த நாள்: 1 February 2011. 
  4. Gulzar; Nihalani, Govind; Chatterji, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. p. 601. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-066-0.
  5. Filmfare Award
  6. National Film Awards
  7. சக்ரா
  8. "Archived copy". Archived from the original on 14 August 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) "Reminiscing About Smita Patil"
  9. Gulazāra; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema: An Enchanting Close-Up of India's Hindi Cinema. Popular Prakashan. pp. 625–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
  10. "Indian Cinema – Smita Patil", SSCnet UCLA

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிதா_பட்டீல்&oldid=3586997" இலிருந்து மீள்விக்கப்பட்டது