சுப்புலட்சுமி காசிநாதன்
Appearance
சுப்புலட்சுமி காசிநாதன் (Subbuluxmi Kasinathan) இலங்கையின் கலைஉலகில் மேடை, வானொலி, திரைப்படங்கள் என்பனவற்றில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த நடிகை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார். கனடாவிலும் தன்னுடைய கலைப்பணியைத் தொடர்கிறார்.
வானொலியில்[தொகு]
இலங்கை வானொலியில் 'சானா'வின் காலம் முதல், பி. விக்னேஸ்வரன் காலம் வரை ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்தவர். வானொலியில் ஒலிபரப்பான நாடகக்கலைஞர் வி.வி. வைரமுத்து அவர்களின் இசைநாடகங்களில் பாடி நடித்துமிருக்கிறார்.
மேடையில்[தொகு]
தினகரன் நாடக விழாவில் கே. எம். வாசகரின் 'சுமதி' நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர் ஆவார்.
புகழ் பெற்ற மேடை நாடகங்கள்[தொகு]
- 'பார்வதி பரமசிவம்'- நகைச்சுவை நாடகம்
- 'சுமதி' - தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்றது
- 'சாணக்கியன்' - சரித்திர நாடகம்
- 'புதியதோர் வீடு' - பா நாடகம் (கனடாவில்)
தொலைக்காட்சியில்[தொகு]
- 'நாற்சார வீட்டில்' - (கனடாவில்)
- 'வை.ரி.லிங்கம் ஷோ' - (கனடாவில்)
நடித்த திரைப்படங்கள்[தொகு]
- கோமாளிகள்[1]
- தெய்வம் தந்த வீடு
- எங்கோ தொலைவில் (கனடாவில்)
- கனவுகள் (கனடாவில்)
- மெதுவாக உன்னைத் தொட்டு[2] (கனடாவில்)
- தமிழிச்சி (திரைப்படம்) (கனடாவில்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கை திரைப்படமான கோமாளிகள் (Video)". Ceylonmirror.net (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-06. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
- ↑ "புலம்பெயர் தமிழரின் தயாரிப்பில் உருவான "நேத்ரா" ஏப்ரலில் திரைக்கு வருகிறது". Virakesari.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.