சுபலேகா சுதாகர்
'சுபலேகா' சுதாகர் | |
---|---|
பிறப்பு | 19 நவம்பர் 1960 விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்திய ஒன்றியம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1982–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | எஸ். பி. சைலஜா (தி. 1989–தற்போது வரை) |
பிள்ளைகள் | சிறீகர் (பி. 1991) |
சுபலேகா சுதாகர் (பிறப்பு சூரவாஜலா சுதாகர் ; 19 நவம்பர் 1960) என்பவர் ஓர் இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகராவார். இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார். இவர் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களான சித்தி, அண்ணி, கோலங்கள், தென்றல் போன்றவற்றில் நடித்துள்ளார்.[1][2] இவர் மமதல கோவிலா தொடரில் நடித்ததற்காக நந்தி விருதைப் பெற்றார்.[3] தென்றல் தொடரில் துளசியின் தந்தையும், ஊனமுற்றவருமான முத்துமாணிக்கமாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் வென்றார்.[4][5]
தொழில்
[தொகு]சுபலேகா சுதாகர் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே. விஸ்வநாத்தின் "சுபலேகா" படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் அறிமுகமானதால் இவருக்கு "சுபலேகா" சுதாகர் என்ற திரைப் பெயர் கிடைத்தது. இவர் நகைச்சுவை, துணை நடிகர் ஆகிய பாத்திரங்களுக்காக புகழ்பெற்றவர்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1989இல் திரைப்பட பின்னணி பாடகியான எஸ். பி. சைலஜாவை[7] திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு சிறீகர் என்ற மகன் 1991இல் பிறந்தார்.
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | பெயர் | பாத்திரம் | மொழி | அலைவரிசை |
---|---|---|---|---|
1997–1998 | மர்மதேசம் - இரகசியம் | அக்னிராசு | தமிழ் | சன் தொலைக்காட்சி |
1998–1999 | மர்மதேசம் - இயந்திரப் பறவை | குமாரசாமி | ||
1999–2001 | சித்தி | கிருஷ்ணா / கண்ணன் | ||
1999 | இதி கத காது | தெலுங்கு | ஈ.டி.வி தெலுங்கு | |
1999–2002 | அனந்தராமனின் திருமணம் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2000-2001 | மர்மதேசம் - எதுவும் நடக்கும் | இரங்காச்சாரி | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி |
2001-2003 | அன்னை | இராமநாதன் | தமிழ் | ஜெயா தொலைக்காட்சி |
2002-2003 | பெண் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2002–2004 | அலை ஓசை | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2002–2005 | அம்மாயி காப்புரம் | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | |
2003–2006 | கோலங்கள் | நாராயணன் | தமிழ் | சன் தொலைக்காட்சி |
2006 | பெண் | முத்துக்குமார் | சன் தொலைக்காட்சி | |
2006 | இராஜராஜேஸ்வரி | அய்யா | ||
2006-2007 | அஞ்சலி | சுந்தரம் | சன் தொலைக்காட்சி | |
2008 | சிம்ரன் திரை | ஜெயா தொலைக்காட்சி | ||
2008–2009 | ஆனந்தம் விளையாடும் வீடு | கலைஞர் தொலைக்காட்சி | ||
2009–2015 | தென்றல் | முத்துமாணிக்கம் | சன் தொலைக்காட்சி | |
2009–2011 | மாதவி | கிருஷ்ணமூர்த்தி | ||
2009–2010 | பவானி | கலைஞர் தொலைக்காட்சி | ||
2012–2014 | இளவரசி | மோகன் சர்மா | சன் தொலைக்காட்சி | |
மமதல கோவிலா | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | ||
2011–2013 | மனசு மமதா | கோட்டீஸ்வர ராவ் | தெலுங்கு | ஈ.டி.வி. தெலுங்கு |
2012 | அனுபந்தாலு | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | |
2013–2014 | மாமியார் தேவை | தமிழ் | ஜீ தமிழ் | |
2015–2017 | நந்தினி விசஸ் நந்தினி | தெலுங்கு | ஈ.டி.வி. பிளஸ் | |
2015–2019 | பிரியமானவள் | கிருஷ்ணன் | தமிழ் | சன் தொலைக்காட்சி |
2019 | கண்ணுலு மூசினா நீவே | கைலாசனந்தா செட்டி | தெலுங்கு | ஸ்டார் மா |
2020 | சிட்டி தல்லி | போஸ்ட்மாஸ்டர் | ஸ்டார் மா | |
2020–தற்போது | அம்மா | சூர்யநாராயணா | ஈ.டி.வி |
நடித்த திரைப்படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]- துணை (1982)
- டூயட் (1994)
- குருதிபுனல் (1995)
- நேசம் (1997)
- ரட்சகன் (1997)
- பிரியமான தோழி (2003)
- அயன் (2009)
- மரியாதை (2009)
இந்தி
[தொகு]- ரத்தசரித்திரம் (2010)
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Subhalekha Sudhakar". nettv4u.com. Retrieved 24 October 2015.
- ↑ "My first Break – Subhalekha Sudhakar". The Hindu. 4 March 2010. Retrieved 14 August 2015.
- ↑ "Subhalekha Sudhakar gets TV Nandi". New Indian Express. 13 November 2012. Retrieved 14 August 2015.
- ↑ "Drama Awards". The Hindu. 19 August 2011. Retrieved 14 August 2015.
- ↑ "Versatility is his forte". Neeraja Murthy. The Hindu. 22 September 2013. Retrieved 14 August 2015.
- ↑ "Subhalekha Sudhakar's Profile". www.altiusdirectory.com. Archived from the original on 2 மே 2015. Retrieved 14 August 2015.
- ↑ "'We have our share of highs and lows'". The Hindu. 8 June 2004. Archived from the original on 26 ஆகத்து 2010. Retrieved 14 August 2015.