உள்ளடக்கத்துக்குச் செல்

சுபதா வராத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபதா வராத்கர்
பிறப்பு9 ஆகத்து 1961 (1961-08-09) (அகவை 63)
மகாராட்டிரம், இந்தியா
கல்விபொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஒட்சி நடனம், புற்றுநோயிலிருந்து மீண்டவர்
பாணிஒடிசி
விருதுகள்மகாராட்டிர மாநில கலாச்சார விருது 2019-20

சுபதா வராத்கர் (Shubhada Varadkar) (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1961) இந்தியப் பாரம்பரிய நடனமான ஒடிசி நடனக்கலைஞர் ஆவார்.[1][2] இவர் தூர்தர்ஷனில் 'அ' தரக் கலைஞராக இருக்கிறார். இவர் 2019-20 ஆம் ஆண்டிற்கான மகாராட்டிர மாநில கலாச்சார விருதைப் பெற்றுள்ளார்.[3] இவர் 1995 இல் கீத கோவிந்தம் பாடல்களுக்கு நடனமாடினார்.[4]

இளமை வரலாறு

[தொகு]

இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும், குருவும், ஒடிசி நடனத்தின் நிபுணருமான கேளுச்சரண மகோபாத்திராவின் சீடரான இவர்,[5] இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான மனோகர் வராத்கர் மற்றும் மாணிக் வராத்கர் ஆகியோரின் மகள் ஆவார்.[6][7] சுபதா வராத்கர் மகாராட்டிராவின் மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், கலாசதன் நுண்கலை நிறுவனத்தில் பரத நாட்டியத்தில் சான்றிதழும் பெற்றுள்ளார்.[8]

இவர் மும்பையில் இந்தியத் தொலைக்காட்சியில் சிலகாலம் செய்தி ஒளிபரப்பாளராக இருந்தார்.[9]

இந்தியக் கலாச்சார உறவுக் குழுவிலும் இடம் பெற்றுள்ளா.[10] மேலும் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் மூத்த சகாவாகவும் இருக்கிறார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Kala Arpan' an offering by 40 maestros of Indian classical art". 20 October 2020.
  2. "Shubhada Varadkar, the Odissi exponent was diagnosed with cancer. A talented and passionate dancer, she fought the disease for the love of her art and her desire to keep dancing and creating something beautiful. Listen to her as she speaks about how not succumb to the challenges life throws at us". Global Indian Youth (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-12.
  3. "Cultural Awards: सांस्कृतिक कार्य संचालनालयामार्फत देण्यात येणाऱ्या विविध सांस्कृतिक पुरस्कारांची घोषणा, See List | 📰 LatestLY मराठी". LatestLY मराठी (in மராத்தி). 2022-05-31. Retrieved 2023-05-07.
  4. "Pune Festival 95". The Times of India, Pune Plus. 1995-09-07. 
  5. Dave, Ranjana (28 July 2017). "Love and war in the time of Krishna" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/dance/love-and-war-in-the-time-of-krishna/article19380337.ece. 
  6. Karelia, Gopi (2020-11-09). "Quetta to Mumbai: How A Paithani Sari & Humanity Saved My Life During Partition". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-12.
  7. "On the eve of India's Independence Day, a partition survivor shares her story". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2023-05-12.
  8. "Dancer Shubhada Varadkar Biography, News, Photos, Videos".
  9. "Shubhada Varadkar | Sanjeevani - Life Beyond Cancer". www.sanjeevani-lifebeyondcancer.com. Retrieved 2023-05-12.
  10. "EMPANELLED ARTISTS LIST" (PDF). Indian Council for Cultural Relations.
  11. "Shubhada Varadkar". Newsband.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபதா_வராத்கர்&oldid=4193439" இலிருந்து மீள்விக்கப்பட்டது