உள்ளடக்கத்துக்குச் செல்

சுனாலினி மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனாலினி மேனன்
பணிகாபி தரக் கட்டுப்பாட்டு நிபுணர்

சுனாலினி என் மேனன் ( Sunalini N Menon ) "காப்பி கப்பிங்" என்றும் அழைக்கப்படும் காப்பி ருசித் துறையில் செயல்படும் ஆசியாவின் முதல் தொழில்முறை பெண்ணாவார்.[1][2][3] இவர் "ஆசியாவின் முதல் பெண் காப்பி" என்று அழைக்கப்படுகிறார்.[4]

தொழில்[தொகு]

சுனாலினி மேனன் 1971 இல் காபி துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தனது ஆரம்ப நாட்களிலிருந்தே இந்தியாவின் சிறப்பு காபி புரட்சியின் ஒரு பகுதியாக இருந்தார். இந்திய காபி வாரியத்தில் உதவி கப்பராக பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டில், மேனன் காஃபிலேப் லிமிடெட் என்ற இந்திய காபி விவசாயிகளுக்கான ஆலோசனை சேவையை நிறுவினார்.[5]

1995 வரை, இந்தியக் காப்பி வாரியத்தின் தரக் கட்டுப்பாட்டு இயக்குநராக இருந்தார். இதைத் தொடர்ந்து, தனது சொந்த நிறுவனமான Coffeelab ஐ இந்தியாவில் பெங்களூரில் நிறுவினார்.[6] 2005 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள சர்வதேச மகளிர் காப்பி கூட்டணியில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

அவர் இந்திய ஜனாதிபதியிடமிருந்து முதல் பெண்மணி சாதனையாளர் விருதையும், அமெரிக்காவின் ஸ்பெஷாலிட்டி காபி அசோசியேஷன் வழங்கும் ஆல்ஃபிரட் பீட் பேஷன்ட் கோப்பை விருதையும் பெற்றுள்ளார்.[7]

சான்றுகள்[தொகு]

  1. Govind, Ranjani. "32 baristas to face-off at Coffee Santhe". தி இந்து.
  2. "Mangaluru: MSNM organizes talk on coffee, opportunities provided by bean - Daijiworld.com".
  3. Nerurkar, Sonal (24 January 2013). "Leisure".
  4. Girish, Uma (Fall 2007). "Asia's First Lady of Coffee". Gastronomica: The Journal of Critical Food Studies (University of California Press) 7 (4): 64–67. doi:10.1525/gfc.2007.7.4.64.  (subscription required)
  5. "Sunalini Menon bags Specialty Coffee Association award". தி இந்து. 12 மே 2014. http://www.thehindubusinessline.com/markets/commodities/Sunalini-Menon-bags-Specialty-Coffee-Association-award/article20769781.ece. 
  6. "The Hindu Opportunities : An interview with Ms. Sunalini Menon, Chief Executive, Coffeelab Private Limited, Bangalore". 12 February 2002. Archived from the original on 12 February 2002.
  7. "Women's Day: Meet India's leading coffee taster". மின்ட். 8 மார்ச் 2023. https://lifestyle.livemint.com/food/discover/womens-day-meet-india-s-leading-coffee-taster-111678245178782.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனாலினி_மேனன்&oldid=3864444" இலிருந்து மீள்விக்கப்பட்டது