சுத்கஜன் தோர்
சுத்கஜன் தோர் | |
---|---|
இருப்பிடம் | பலூசிஸ்தான், பாகிஸ்தான் |
பகுதி | மக்ரன் |
ஆயத்தொலைகள் | 25°29′59.72″N 61°57′3.15″E / 25.4999222°N 61.9508750°E |
வகை | குடியிருப்புப் பகுதி |
பரப்பளவு | 4.5 ha (11 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
சுத்கஜன் தோர் (Sutkagan Dor (or Sutkagen Dor) தற்கால பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில், ஈரானின் எல்லைப்புறத்தில், பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் பிரதேசத்தில் அமைந்த சிந்துவெளி நாகரிகத்தின் தூரமேற்கு எல்லைப்பகுதியாகும்.[1] [2]
சிந்துவெளி தொல்லியல் களமான சுத்கஜன் தோர் தொல்லியல் களம் கராச்சி நகரத்திற்கு மேற்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், அரபுக் கடற்கரையில் உள்ள குவாடர் துறைமுக நகரத்திற்கு அருகே மக்ரான் கடற்கரை பிரதேசத்தில், தஸ்த் ஆற்றின் கரையில், ஈரான் நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளது.[1][3][4]
அகழாய்வுகள்
[தொகு]1875-ஆம் ஆண்டில் சுத்கஜன் தோர் தொல்லியல் களத்தில் மேஜர் எட்வர்டு மோக்லெர் என்பவரால் சிறிய அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1960-ஆம் ஆண்டில் ஜார்ஜ் எப். டேல்ஸ் என்பவரால் மக்ரான் கடற்கரைப் பிர்தேச மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் போது, சுத்கஜன் தோர் தொல்லியல் களத்தில் விரிவான அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.[1]
இத்தொல்லியல் களத்தில் 2705 செண்டி மீட்டர் நீளம் கொண்ட 27 தீக்கற்கள், கல் பாத்திரங்கள், கல் மற்றும் செப்பு முனைகள் கொண்ட ஈட்டிகள், சங்கு மணிகள், மட்பாண்டங்கள் மற்றும் செப்பு-வெண்கலம் கலந்த தட்டுகள் கண்பிடிக்கப்பட்டது. [1]
இந்தியாவின் சிந்திவெளி நாகரிகக் களங்களான குஜராத்தின் தோலாவிரா மற்றும் லோத்தல் கடற்கரை நகரங்களை இணைக்கும் கடல் வணிகப் பாதையாக சுத்கஜன் தோர் தொல்லியல் களம் விளங்கியுள்ளது.[5][6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Possehl, Gregory L. (2003). The Indus Civilization : A Contemporary perspective ([3rd printing]. ed.). New Delhi: Vistaar Publications. pp. 79–80. ISBN 8178292912.
- ↑ [https://www.britannica.com/place/Sutkagen-Dor Sutkagen Dor ancient site in Pakistan]
- ↑ McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. p. 169. ISBN 9781576079072.
- ↑ Sutkagen Dor, ancient site in Pakistan
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. p. 167. ISBN 9788131711200.
- ↑ Singh, Sarva Daman (1968). Ancient Indian Warfare With Special Reference To The Vedic Period. Brill Archive. p. 122.