உள்ளடக்கத்துக்குச் செல்

சுதாசம வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதாசம வம்சம்
சுமார் 10ஆம் நூற்றண்டு–1472
சுதாசம வம்சம் ஆண்ட சௌராட்டிராவின் ஒரு பகுதி.
சுதாசம வம்சம் ஆண்ட சௌராட்டிராவின் ஒரு பகுதி.
தலைநகரம்வந்தாலி
ஜூனாகத்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
• சுமார் 9ஆம் நூற்றண்டு
சுதாசந்திரன்
• சுமார் 10ஆம் நூற்றண்டு
கிரஹாரிப்பு
• 11ஆம் நூற்றண்டின் பிற்பகுதி
நவகானன்
• 12ஆம் நூற்றண்டின் முற்பகுதி
கெங்கரன்
• 1294 - 1306
முதலாம் மண்டலிகன்
• 1451 - 1472
மூன்றாம் மண்டலிகன்
வரலாறு 
• தொடக்கம்
சுமார் 10ஆம் நூற்றண்டு
• முடிவு
1472
முந்தையது
பின்னையது
சவ்டா வம்சம்
வகேலா வம்சம்
தில்லி சுல்தானகத்தின் கீழ் குசராத்து

சுதாசம வம்சம் (Chudasama dynasty) 9 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் குசராத்து மாநிலத்தின் இன்றைய சௌராட்டிரா பகுதியின் சில பகுதிகளை ஆட்சி செய்த வம்சமாகும். இவர்களின் தலைநகரம் ஜூனாகத் மற்றும் வாமனஸ்தலியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் இராஜபுத்திர குலங்களில் வகைப்படுத்தப்பட்டனர். [1] இவர்கள் தங்களை கடவுள் கிருட்டிணன் தோன்றிய சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர்.

வரலாறு

[தொகு]

சுதாசம வம்சத்தின் ஆரம்பகால வரலாறு கிட்டத்தட்ட தொலைந்து விட்டது. நாட்டுப்புறக் கதைகள் பெயர்கள், காலம் ஆகியவற்றிலிருந்து மிகவும் வேறுபடுகின்றன. எனவே அவை நம்பகமானதாக கருதப்படவில்லை. பாரம்பரியமாக, வம்சம் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதாசந்திரன் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிரஹரிபு, நவகானா மற்றும் கெங்கரா போன்ற அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் சோலங்கி ஆட்சியாளர்களான மூலராஜா மற்றும் ஜெயசிம்ம சித்தராசனுடன் மோதலில் இருந்தனர். இவ்வாறு அவை சமகால மற்றும் பிற்கால சைன சரித்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சோலங்கிய ஆட்சி மற்றும் அவர்களின் வாரிசான வகேலா வம்சத்தின் முடிவிற்குப் பிறகு, சுதாசமர்கள் சுதந்திரமாக அல்லது வாரிசு மாநிலங்களான தில்லி சுல்தானகம் மற்றும் குசராத் சுல்தானகத்தின் அடிமைகளாக தொடர்ந்து ஆட்சி செய்தனர். கல்வெட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட முதல் அறியப்பட்ட சுதாசம ஆட்சியாளர் முதலாம் மண்டலிகா ஆவார். இவருடைய ஆட்சியின் போது தில்லியின் கில்ஜி வம்சத்தால் குசராத் படையெடுப்புக்கு ஆளானது. வம்சத்தின் கடைசி மன்னர், மூன்றாம் மண்டலிகா, 1472-இல் சுல்தான் முகமது பெகடாவால் தோற்கடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக இசுலாமுக்கு மாற்றப்பட்டார். அவரது இராச்சியமும் தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. [2]

சுதாசம ஆட்சியாளர் கிரஹரிபுவால் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட உபர்கோட் கோட்டை

== படிக்கிணறுகள் கிரஹரிபுவின் ஆட்சியின் போது ஜூனாகத்தின் உபர்கோட் கோட்டை சுதாசமஸ் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் வாமனஸ்தலியில் இருந்து ஜுனாகத்திற்கு தனது தலைநகரை மாற்றிய நவகனாவால் மீண்டும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் கோட்டையில் முறையே நவ்கான் கிணறு மற்றும் ஆதி காதி கிணறு ஆகியவற்றின் கட்டுமானங்களுடன் தொடர்புடையவர். வகேலா அரசவையில் அமைச்சராக இருந்த தேஜபாலனால் கட்டப்பட்டாலும், ஜுனாகத்தில் இருந்து வந்தலி செல்லும் வழியில் இரா கெங்கர் படிக்கிணறு என்ற படிக்கட்டு கிணறு அவரது வழித்தோன்றல் கெங்கராவால் கட்டப்பட்டது. [3]

சான்றுகள்

[தொகு]
  1. J Chaube (1975). History of Gujarat Kingdom, 1458-1537. p. 16. ISBN 9780883865736.
  2. Gupta, R. K.; Bakshi, S. R., eds. (2008). Studies In Indian History: Rajasthan Through The Ages: Marwar and British Administration. Vol. 5. New Delhi: Sarup & Sons. pp. 22–23. ISBN 978-8-17625-841-8. Retrieved 2012-05-21.
  3. Jutta Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. p. 22. ISBN 978-0-391-02284-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாசம_வம்சம்&oldid=3452199" இலிருந்து மீள்விக்கப்பட்டது