சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது
Appearance
சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது (Golden Pen of Freedom Award) என்பது செய்தித்தாட்டுறையின் சுதந்திரத்திற்கும், மேம்பாட்டுக்கும், அதன் பாதுகாப்புக்கும் தனித்துவமான பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்கள், அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு உலகளாவிய விருதாகும். இவ்விருது உலகச் செய்தித்தாள் நிறுவனத்தினால் 1961 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. விருது பெற்றவர்களின் தனிச்சிறப்பு என்பது திடமனம், அர்ப்பணிப்பு, சிறை வாழ்க்கை, உடல் சார்ந்த துன்புறுத்தல்கள், தணிக்கை, தலைமறைவு வாழ்க்கை, படுகொலை என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
- விருது பெற்றோர்
ஆண்டு | விருது பெற்றவர் | நாடு |
---|---|---|
1961 | அகமெது எமின் யல்மன் | துருக்கி |
1963 | செயின் வின் | பர்மா |
1964 | கேப்ரியல் மக்காசோ | கொங்கோ |
1965 | எஸ்மண்ட் விக்கிரமசிங்க | இலங்கை |
1966 | ஜூல்ஸ் டுபோய் | ஐக்கிய அமெரிக்கா |
1967 | மொக்டார் லூபிசு | இந்தோனேசியா |
1968 | கிறிஸ்தோசு லம்பிராக்கிசு | கிரேக்கம் |
1969 | செக்கொசிலவாக்கிய ஊடகம் | செக்கோசிலோவாக்கியா |
1970 | அல்பேர்ட்டோ கைன்சா பாஸ் | அர்ஜெண்டினா |
1972 | ஹுபெர்ட் பீவ்-மெரி | பிரான்சு |
1973 | அன்டன் பெட்ஸ் | செருமனி |
1974 | ஜூலியோ டி மெஸ்க்கிட்டா நேட்டோ | பிரேசில் |
1975 | சங்-மன் கிம் | தென் கொரியா |
1976 | ரவுல் ரீகோ | போர்த்துக்கல் |
1977 | ராபர்ட் ஹை லில்லி | வட அயர்லாந்து |
1978 | டொனால்ட் வுட்ஸ், பெர்சி கோபோசா | தென்னாப்பிரிக்கா |
1979 | கிளாடி பெல்லங்கர் | பிரான்சு |
1980 | ஜகோபோ டைமர்மேன் | அர்ஜென்டினா |
1981 | ஜோசு சேவியர் உரங்கா | ஸ்பெயின் |
1982 | ஜோகின் கமோரோ பரியோசு | நிக்கரகுவா |
1985 | ஜோகின் ரோசசு | பிலிப்பைன்சு |
1986 | அந்தோணி ஹியர்டு | தென்னாப்பிரிக்கா |
1987 | ஜுவான் பப்லோ கர்டெனாஸ் | சிலி |
1988 | நஜி அல்-அலி | பாலஸ்தீனிய பகுதிகள் |
1989 | செர்ஜெய் கிரிகோரியண்ட்சு | சோவியத் யூனியன் |
1990 | லூயிசு கபிரியேல் கனோ | கொலம்பியா |
1991 | கிதோபு இமன்யரா | கென்யா |
1992 | தை கிங் | சீனா |
1993 | பியசு ந்ஜவே | கேமரூன் |
1994 | ஒமர் பெதொவுசெட் | அல்ஜீரியா |
1995 | கவோ யூ | சீனா |
1996 | யிண்டரிமோ ரெசுடானொ டையசு | கியூபா |
1997 | 'னாசா போர்பா, ஃபெரல் ட்ரிபூன், ஆசுலோபொடெஞ்சே | யுகோசிலேவிய, க்ரோதிய, பொஸ்னியா-ஹெர்சிகோவின கூட்டாட்சிக் குடியரசு |
1998 | தொஅன் வியட் ஹோட் | வியட்நாம் |
1999 | பரஜ் சர்கோஹி | ஈரான் |
2000 | னிஜார் நயூப் | சிரியா |
2001 | வின் டின், சன் சன் ந்வே | பர்மா |
2002 | கியோப்பிரி ந்யரோதா | ஜிம்பாப்வே |
2003 | பெலாருசிய பத்திரிக்கையாளர் சங்கம் | பெலாருஸ் |
2004 | ருஸ்லன் சலிபோவ் | உஸ்பெகிஸ்த்தான் |
2005 | மகுஜப் மொகமது சலி | சூடான் |
2006 | அக்பர் கஞ்சி | ஈரான் |
2007 | ஷீ டாவோ | சீனா |
2008 | லீ சாங்கிங் | சீனா |
2009 | னஜம் சேதி | பாகிஸ்தான் |
2010 | அகமது செய்தபதி | ஈரான் |
2011 | தவித் இசாக் | எரித்ரியா/ஸ்வீடன் |
2012 | அனபெல் எர்னாண்டசு | மெக்ஸிகோ |