சுட்டீவன் பீட்டர் இரிகவுடு
சுட்டீவன் பீட்டர் இரிகவுடு Stephen Peter Rigaud | |
---|---|
பிறப்பு | 12ஆகத்து 1774 |
இறப்பு | 16 மார்ச்சு 1839 (அகவை 64) |
Resting place | புனித ஜேம்சு, பிக்காடில்லி, இலண்டன் |
கல்வி கற்ற இடங்கள் | எக்சீட்டர் கல்லூரி, ஆக்சுபோர்டு |
சுட்டீவன் பீட்டர் இரிகவுடு அல்லது ஸ்டீபன் பீட்டர் ரிகாட் (Stephen Peter Rigaud)) (12 ஆகத்து 1774–16 மார்ச்சு 1839), [1] ஓர் இங்கிலாந்து கணிதவியல் வரலாற்றாளரும் வானியலாளரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.
இரிகவுடு ஒரு பிரெஞ்சு சீர்திருத்தக் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] இவரது தந்தை ஜேம்சு சுட்டீவன் இரிகவுடு கிங்சு (கியூ) வான்காணகத்தின் வானியல் நோக்கீட்டாளர் ஆவார். ஓவியரான ஜான் பிரான்சிசு இரிகவுடு, நான்கு அகவை நிரம்பிய இரிகவுடு மற்றும் அவருடைய தங்கையான மேரி ஆன்னி இருக்கும் ஓவியத்தை வரைந்துள்ளார். ஆயினும் ஜான் பிரான்சிசு, சுட்டீவன் பீட்டருடைய அத்தானல்லர், வேறு வாய்ப்புள்ள உறவு முறையும் தெரியவில்லை.
இவர் 1794 முதல் 1810 வரை ஆக்சுபோர்டு எக்சீட்டர் கல்லூரியில் ஆய்வுறுப்பினராகவும், 1810 முதல் 1827 வரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வடிவியலில் சவிலியன் இருக்கையை ஏற்றுள்ளார், 1827 முதல் 1839 வரை வானியலில் சவிலியன் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[2] இவர் 1815 முதல் 1826 வரை இலண்டனில் உள்ள இரிச்மாண்டு கிரீன் பகுதி இரிச்மாண்டு தெரு, 21 இல் வாழ்ந்துள்ளார்.[3]
வெளியீடுகள்
[தொகு]- சர் அய்சக் நியூட்டன் இயற்றிய இயற்கை மெய்யியலின் நெறிமுறைகள் எனும் நூலின் முதல் வெளியீடு பற்றிய வரலாறு (1838)
இறப்பும் தகைமையும்
[தொகு]இவர் 1839 மார்ச்சு 16 இல் இறந்தார். இவர் இலண்டனில் உள்ள பிக்காடில்லி புனித ஜேம்சு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இங்கு இவரது நினைவுச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இவரது மூத்த மகனான சுட்டீவன் ஜோர்டான் இரிகவுடு (1816–1859) ஓர் ஆங்கிலேயப் பாதிரியாரும் பள்ளி ஆசிரியரும் ஆவார். பிறகு இவர் அந்திகுவா பேராலயப் பேராயர் ஆனார்.
வானியல், கணிதவியல், இயற்பியல் சார்ந்த சில நூல்கள் ஆக்சுபோர்டு இராடுகிளிப் வான்காணகத்தாலும் மேலும் எஞ்சிய சில நூல்கள் பாட்லியன் நூலகத்தாலும் 1935 இல் வாங்கப்பட்டுள்ளன. இந்த பாட்லியன் திரட்டில் 840 நூல்கள் உள்ளன. சில நூல்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1840MNRAS...5...22. Page 22. Bibcode: 1840MNRAS...5...22.. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1840MNRAS...5...22.. பார்த்த நாள்: 2017-02-01.
- ↑ 2.0 2.1 "MSS. Rigaud 3-33, 33A, 34-51, 53-7, 60-8 Riguad Papers". Collection Level Description: Savile Collection. Bodleian Library, University of Oxford. 9 June 2011. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
- ↑ "Richmond Green: Properties". Richmond Libraries’ Local Studies Collection: Local History Notes. London Borough of Richmond upon Thames. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
- ↑ "Rare Books Named Collection Descriptions". Bodleian Libraries. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.