சுடோத்தார்டு இயந்திரம்
சுடோத்தார்டு இயந்திரம் (Stoddard engine) எனப்படும் ஆற்றல் உற்பத்தி இயந்திரத்தின் இரண்டு பதிப்புகளை எலியட் யே. சுடோத்தார்டு கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். முதலாவது கண்டுபிடிப்பு 1919 ஆம் ஆண்டிலும் இரண்டாவது கண்டுபிடிப்பு 1933 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. பொது இயந்திர வகைப்பாடு என்பது வால்வுகள் எனப்படும் அடைப்பான்களும் ஒற்றை-கட்ட வாயு இயக்கு நீர்மம் (அதாவது சூடான காற்று இயந்திரம்) கொண்ட வெளியெரி இயந்திரமாகும் . உட்புறமாக வேலை செய்யும் பாய்மம் அசலாக காற்றாகும். இருப்பினும் நவீன இயந்திரங்களில் ஈலியம், ஐதரசன் போன்ற மற்ற வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடைப்பான்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஒரு சாத்தியமான வெப்ப இயக்கவியல் நன்மை என்னவென்றால் அடைப்பானற்ற கலக்கும் இயந்திரத்தில் ஏற்படும் இயந்திர செயல்திறன் குறைவும் சக்திவெளியீடு குறைவும் நீங்கும் என்பதாகும்.
1919 சுடோத்தார்டு இயந்திரம்
[தொகு]1919 சுடோத்தார்டு சுழற்சியின் பொதுவான வெப்ப இயக்கவியல் செயல்முறைகள்: :[1]
- மாறாவெப்ப சுருக்கம்
- சமவழுத்த வெப்பச் சேர்க்கை
- மாறாவெப்ப விரிவாக்கம்
- சமவழுத்த வெப்ப நீக்கம்
சுகாட்ச்சு யோக் எனப்படும் பரிமாற்று இயக்க இயந்திரத்தில் காப்புரிமையில் உள்ள இயந்திர வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது. .
1933 சுடோத்தார்டு இயந்திரம்
[தொகு]1933 ஆம் ஆண்டு வடிவமைப்பில் [2] சுடோத்தார்டு முந்தைய 1919 ஆம் ஆண்டு உருவாக்கிய இயந்திரப் பதிப்பின் அதே பொதுவான வெப்ப இயக்கவியல் செயல்முறைகளைப் பராமரித்து வெப்பப் பரிமாற்றிகளின் உட்புற அளவை மட்டும் குறைத்தார்.
காட்சிக் கூடம்
[தொகு]Stoddard engine diagrams