சுஜாதா அறக்கட்டளை விருது
சுஜாதா அறக்கட்டளை விருது என்பது எழுத்தாளர் சுஜாதாவின் நினைவை ஒட்டி, உயிர்மை இதழுடன் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருது 2009 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சுஜாதா பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன.[1]
விருது பிரிவுகள்
[தொகு]என ஆறு பிரிவுகளில் விருதும் பரிசும் வழங்கப்படுகிறது.
பரிசும் பாராட்டும்
[தொகு]ஒவ்வொரு துறைக்குமான விருதுக்குப் பத்தாயிரம் உரூபாய் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.
விதிமுறைகள்
[தொகு]முதல் நான்கு பிரிவுகளில் அந்தந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.
5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும்.
விருது பெற்றவர்கள் துறை விவரம்
[தொகு]கவிதைக்கான விருது
ஆண்டு | நூல் | படைப்பாளர் |
---|---|---|
2010 | காந்தியைக் கொன்றது தவறுதான் | ரமேஷ்-பிரேதன் |
2011 | ஏரிக்கரையில் வசிப்பவன் | ஸ்ரீநேசன் |
2012 | நீருக்குக் கதவுகள் இல்லை | சுகுமாரன் |
2013 | பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி | மனோ.மோகன் |
2014 | சிறகுகளை விரிக்கிறவன் பறவையாகிறான் | ரவி உதயன் |
2015 | எரிவதும் அணைவதும் ஒன்றே | போகன் சங்கர்[2] |
2016 | ஆனந்தியின் பொருட்டுத் தாழப் பறக்கும் தட்டான்கள் | கதிர்பாரதி |
2017 | லாகிரி | நரன் |
2017 | சம்மனசுக் காடு | ஜெ.பிரான்சிஸ் கிருபா |
2019 | வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி | ராஜேஷ் வைரபாண்டியன்[3] |
2019 | நொதுமலர்க் கன்னி | மௌனன் யாத்ரிகா[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "செங்கனி". www.senkani.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "சுஜாதா விருதுகள் 2015". Hindu Tamil Thisai. 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ 3.0 3.1 "உயிர்மை சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருதுகள் 2019!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.