உள்ளடக்கத்துக்குச் செல்

சுசான்னி மாதென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுசான்னி மாதென் (Suzanne Madden) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பிரான்சு, பாரீசில் உள்ள சாக்கிளே அணுக்கரு ஆய்வு மையத்தில் ஆய்வாலராகப் பணிபுரிகிறார். இவருக்கு 1995 இல் அமெரிக்க வானியல் கழகத்தால் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வழங்கப்பட்டுள்ளது.[1]

மாதென் குறும்பால்வெளிகளையும் பிற பால்வெளிகளில் உள்ள உடுக்கணத்திடைப் பொருள்களையும் ஆய்வு செய்துள்ளார். இவருக்கு எர்ழ்செல் விண்வெளி வான்காணகத்தில் உத்தரவாதமான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

இவர் பால்வெளிகள், புடவி சார்ந்த எட்டாம் பிரிவிலும் (2012 வரையில்) பால்வெளிகளுக்கான ஆணையம் 28 இலும் (2015 வரையில்) முன்பு இணைந்து பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் முனைவாகச் செயல்பட்டுள்ளார். அண்மையில் இவர் உடுக்கணப்பொருள், களப்புடவி சார்ந்த எச் பிரிவிலும் அண்டவியல், பால்வெளிகள் சார்ந்த ஜே பிரிவிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. 27 June 2016. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
  2. "Suzanne Madden and Maud Galametz Interview". www.astronomynow.com. 2014. Archived from the original on 20 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Administration - Suzanne Madden". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 5 Dec 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்னி_மாதென்&oldid=3620226" இலிருந்து மீள்விக்கப்பட்டது