உள்ளடக்கத்துக்குச் செல்

சுகைல் உசைன் உசைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகைல் உசைன் உசைனி (Hussein el-Husseini), லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாவின் தலைமையகப் படைத்தலைவரும், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்த் தளவாடங்கள் பரிமாற்றங்களை நிர்வகிப்பதிலும், ஹிஸ்புல்லா அமைப்புகளின் வரவு-செலவு திட்டங்களை கவணிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். மேலும் லெபனான் மற்றும் சிரியாலிருந்து, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் போருக்கான செயல்பாட்டுத் திட்டங்களை மேற்பார்வையிடுதலுக்கு பொறுப்பானவர். அத்துடன் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் துல்லியமாக வழிநடத்தும் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கும், ஆயுதங்களை சேமிப்பதற்கும் பொறுப்பானவர். இவர் 1980 முதல் ஹிஸ்புல்லா அமைப்பில் இயங்கி வந்தார்.

மறைவு

[தொகு]

7 அக்டோபர் 2024 அன்று பெய்ரூத் நகரத்திலிருந்த சுகைல் உசைன் உசைனி, இஸ்ரேலிய வான் படையின் துல்லியத் தாக்குதலில், குண்டு வீசி கொல்லப்பட்டார்.[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகைல்_உசைன்_உசைனி&oldid=4110440" இலிருந்து மீள்விக்கப்பட்டது