சீ. ஆப்ரே சிமித்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சீ. ஆப்ரே சிமித் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 66) | மார்ச்சு 12 1889 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 23 2008 |
சீ. ஆப்ரே சிமித் (C. Aubrey Smith, பிறப்பு: சூலை 21 1863, இறப்பு: திசம்பர் 20 1948), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 143 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரவுண்ட் தெ கார்னர் சுமித் எனும் புனைப் பெயரும் இவருக்கு உண்டு[1][2]. வலதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர் இங்கிலாந்து தேசிய அணி, கேம்ப்ரிட் பல்கலைக்கழக அணி, சசெக்ஸ் மற்றும் டிரான்ஸ்வால் ஆகியத் துடுப்பாட்ட அணிகளுக்காக விளையாடினார். இவர் சார்டர்ஹவுஸ்மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் கல்வி பயின்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சுமித் லண்டன், இங்கிலாந்தில் சூலை 21, 1863 இல் பிறந்தார். இவரின் தந்தை சார்லஸ் ஜான் ஒரு மருத்துவர். இவரின் தாய் சாரா அன், இவருக்கு பெரில் ஃபேபர் எனும் சகோதரி காஸ்மோ ஹாமில்டனை மணந்தார்.[3] இவர் சார்ஹவுஸ் பள்ளியில் பள்ளிக்கல்வியினைப் பயின்றார். மேலும் கேம்ப்ரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[4][5] 1888 ஆம் ஆண்டில் இவர் தென்னாப்பிரிக்காவில் வாழந்தார். இவர் 1896 ஆம் ஆண்டில் இசபெல்லா என்பவரைத் திருமணம் செய்தார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]1889 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மார்ச் 12 இல் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் 1882 முதல் 1885 ஆம் ஆண்டுகளில் பலமுரை சசெக்ஸ் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அணிகளிக்காக விளையாடியுள்ளார்.[4] தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இங்கிலாந்து லெவன் அனியின் தலைவராக இருந்துள்ளார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.[4] இதன் முதல் ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[6] 1932 ஆம் ஆண்டில் இவர் ஹாலிவுட் துடுப்பாட்ட சங்கம் என்பதனை நிறுவினார். உள்ளூர் அமெரிக்க வீரர்கள் மற்றும் டேவிட் நிவன், லாரன்ச் ஆலிவர், நிஜல் புரூசு மற்றும் லெஸ்லி ஆவர்டு ஆகியோர் இந்த சங்கத்தில் சேர்ந்தனர்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]1985 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கில் நடிக்கத் துவங்கினார். தெ பிரிசனர் ஆஃப் செந்தா என்பதில் முக்கியக் கதாப்பத்திரத்தில் தோன்றினார். அதன்பிறகு கிங் மற்றும் லுக் அலைக் போன்றவற்றில் இரட்டை வேடங்களில் தோன்றினார். 1895 ஆம் ஆண்டில் மிசஸ் எப்ஸ்மித் மற்றும் 1907 இல் மேரி தோரோவுடன் இணாஇந்து தெ மாரல்ஸ் ஆஅஃப் மார்கஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார்.
விருதுகள்
[தொகு]ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் விருது [7] 1933 ஆம் ஆண்டில் ஸ்கிரீன் ஆக்டர் கில்டு விருது பெற்றார். 1938 ஆம் ஆண்டில் இவர் சிபிஇ (கமாண்டர் ஆஃப் தெ ஆர்டர் ஆஃப் பிரித்தானிய எம்பயர் விருது)[8] 1944[9] ஆம் ஆண்டில் ஆறாம் ஜார்ஜ் இவரரின் ஆங்கில- அமெரிக்க நட்புறவிற்காக நைட் பட்டம் வழங்கினார்.[10][11][12]
சான்றுகள்
[தொகு]- ↑ Frindall, Bill (2009). Ask Bearders. BBC Books. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84607-880-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "The Greatest: One Test Wonders". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ Who Was Who in the Theatre: 1912–1976 vol. 4, Q-Z, p. 2208; compiled from editions originally published annually by John Parker, this 1976 version by Gale Research.
- ↑ 4.0 4.1 4.2 Wills, Walter H., 1907. The Anglo-African Who's Who, Jeppestown Press, United Kingdom. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9553936-3-9
- ↑ "Smith, Charles Aubrey (SMT881CA)". A Cambridge Alumni Database. University of Cambridge.
- ↑ South Africa v England at Port Elizabeth, 1889. Content-uk.cricinfo.com. Retrieved on 19 May 2018.
- ↑ C. Aubrey Smith – Awards. IMDb
- ↑ Commanders of the Order of the British Empire – Supplement to The London Gazette, 9 June 1938, p. 3701.
- ↑ Recipients of the Honour of Knighthood – Supplement to The London Gazette, 2 June 1944, p. 2566.
- ↑ The Home of CricketArchive. Cricketarchive.com (20 December 1948). Retrieved on 2018-05-19.
- ↑ Obituary Variety, 22 December 1948, p. 55.
- ↑ C. Aubrey Smith – Biography. IMDb