உள்ளடக்கத்துக்குச் செல்

சீன பச்சைப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன பச்சைப் பாம்பு
A light green snake with vivid green belly coiled loosely on a tightly woven dark green textile hanging in front of a light blue emulsioned wall, head slightly up, tongue flicking.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
தையாசு
இனம்:
தை. தோரியே
இருசொற் பெயரீடு
தையாசு தோரியே
(குந்தர், 1858)
வேறு பெயர்கள் [2]
பட்டியல்
  • சைக்ளோபிசு மேஜர் குந்தர், 1858
  • கெர்பெடோடிரையாசு குளோரிசு காலோவெல், 1861
  • அபலாலெசு மேஜர் – போட்ஜெர், 1894
  • எண்டெகினசு மேஜர் – கோப், 1895
  • லையோபெல்டிசு மேஜர் – இசுடெஜ்னேஜர், 1907
  • லையோபெல்டிசு மேஜர்bicarinata மாகி, 1931
  • யூரிபோலிசு மேஜர் – போப், 1935
  • ஒபியோடிரைசு மேஜர் – மா. ஆ. சுமித், 1943
  • சைக்ளோப்சு மேஜர் – ஓட்டா, 1991

சீன பச்சைப் பாம்பு (தையாசு மேஜர்) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு ஆகும்.[1][2]

விளக்கம்

[தொகு]

சீன பச்சைப் பாம்பு மெலிந்த, நடுத்தர அளவிலான பாம்பு ஆகும். இதன் மொத்த நீளம் சராசரியாக 75 முதல் 90 செமீ (2 1⁄2-3 அடி) வரை இருக்கும். ஆனால் எப்போதாவது 120 செமீ (4 அடி) வரை வளரலாம். இப்பாம்பின் மேல் புறம் பச்சை நிறத்திலும் வயிற்றுப்புறச் செதில்கள் பச்சை-மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண் பாம்பின் நடுத்தர-வயிற்றுப்புறச் செதில்கள் இணைப்புடன் காணப்படும். சில மாதிரிகள் சிதறிய கருப்பு புள்ளிகளை முதுகுப்புறத்தில் கொண்டுள்ளன.

பரவல்

[தொகு]

சீன பச்சைப் பாம்பு மத்திய மற்றும் தெற்கு சீனாவில் (ஹைனான், ஹெனன், கான்சு, அன்ஹுயி, சிச்சுவான், புஜியான், குவாங்டொங், குவாங்சி, குயிசூ, ஹுனான், ஹூபே, ஜியாங்சி, சியாங்சு, சென்சி, செஜியாங், ஆங்காங்[3], தைவான், வடக்கு வியட்நாம், லாவோஸ் மற்றும் வங்கதேசம் (சில்ஹெட், ரடார்குல் சதுப்பு காடு) ஆகிய இடங்களில் காணப்படுகிறது.[4]

இது ஈரப்பதமான காடுகளிலும் விவசாய நிலங்களிலும் காணப்படுகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்

[தொகு]

சீன பச்சைப் பாம்பு பகலாடி வகையினைச் சார்ந்த பகுதி மரங்களில் வாழும் பாம்பு ஆகும். இவை அரிதாகவே மக்களைக் கடிக்கும்.[4]

உணவு

[தொகு]

சீன பச்சைப் பாம்பு, மண்புழு, பூச்சி குடம்பிகள் மற்றும் பிற மென்மையான முதுகெலும்பற்ற விலங்குகளை உணவாக உட்கொள்ளும்.[4]

இனப்பெருக்கம்

[தொகு]

சீன பச்சைப் பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு முறை 2 முதல் 16 முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 China Snakes Working Group (2014). "Ptyas major". IUCN Red List of Threatened Species 2014: e.T192054A2033832. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T192054A2033832.en. https://www.iucnredlist.org/species/192054/2033832. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 Ptyas major at the Reptarium.cz Reptile Database. Accessed 4 May 2020.
  3. Reptiles of Hong Kong
  4. 4.0 4.1 4.2 Hans Breuer & William Christopher Murphy Snakes of Taiwan பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம்

மேலும் வாசிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_பச்சைப்_பாம்பு&oldid=4126919" இலிருந்து மீள்விக்கப்பட்டது