குருத்துவாரா முக்த்சர் சாகிபு இந்தத் திருவிழா முக்த்சர் சண்டையைக் கொண்டாடும் வகையில் துவக்கத்தில் குரு அமர் தாசு தேர்ந்தெடுத்தார்.
பர்காசு உத்சவ் தாசுவே பட்ஷா
சனவரி 31
இத்திருவிழாவின் பெயரின் தமிழாக்கம் பத்தாவது தெய்வீக ஒளியின் பிறப்புத் திருவிழா என்பதாகும். இது சீக்கிய பத்தாவது குரு கோவிந்த் சிங் பிறப்பைக் கொண்டாடுகின்றது. சீக்கியர்களால் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் திருவிழா இதுவாகும்.
ஓல்லா மொகல்லாவின்போது சீக்கிய இளைஞரின் ஆற்றுகைஅனந்த்பூர் சாகிபில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் ஆண்டுத் திருவிழாவாகும். குரு கோவிந்த் சிங்கால் துவக்கப்பட்டபோது படைத்துறை பயிற்சிகளுக்காகவும் நட்புச் சண்டைகளுக்காகவும் சீக்கியர்களைக் கூட்டினார். நட்புச் சண்டைகள் முடிந்த பிறகு கீர்த்தன் (சமயப் பாட்டு) மற்றும் வீரக் கவிதைகளுக்கு போட்டி நடைபெறும். இன்று நிகாங் சீக்கியர்கள் தற்காப்பு வழமையையும் நட்புச் சண்டைகளையும் தொடர்கின்றனர்; தங்களது குதிரையேற்றத் திறமைகளையும் வாள்வீச்சுத் திறமைகளையும் வெளிப்படுத்துகின்றனர். தவிரவும் கீர்த்தன் பாடும் பல மேடைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. உலகளவில் நிகாங் சீக்கிய இனத்தவரிடம் இந்நாள் 'சீக்கிய ஒலிம்பிக்சாக' கொண்டாடப்படுகின்றது; வாள்வீச்சு, குதிரையேற்றம், கட்கா எனப்படும் சீக்கிய தற்காப்புக் கலை, வல்லுறு வளர்ப்பு போன்றவற்றில் போட்டிகளும் காட்சிப்படுத்தலும் நிகழ்கின்றன.
கால்சாவின் பிறப்பிடமான அனந்த்பூர் சாஹிப்பில் உள்ள தக்த் சிறீ கேஷ்கர் சாகிபில் வைசாக்கிஇந்தியப் பஞ்சாபில் வைசாக்கி, கால்சா சமூக ஒற்றுமையின் பிறப்பைக் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது. அனந்த் சாகிபில் உள்ள கேஷ்கர் சாகிபில் இது பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. இந்தியா, ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் பிற சீக்கியர் வாழும் நாடுகளில் சீக்கியர்கள் பொதுத் திருவிழா அல்லது பேரணியில் ஒன்று கூடுகின்றனர். இந்தத் திருவிழாவின் முதன்மையான அங்கமாக உள்ளூர் குருத்துவாராவில் சீக்கிய சமயத்தை எதிரொளிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் குரு கிரந்த் சாகிப் எடுத்துச் செல்லப்பட்டு அனைவரும் அதற்கு மரியாதை செலுத்துவது உள்ளது. இத்திருநாளில், சீக்கியர்கள் பொதுவாக விடிகாலையிலேயே குருத்துவார் சென்று பூங்கொத்துகளையும் மற்ற வேண்டுதல்களையும் வழங்குவர். நகரில் ஊர்வலங்கள் நடத்துவதும் பொதுவான வழக்கமாக உள்ளது.[1]
உயிர்க்கொடை நாளை போற்றும்விதமாக நகர் கீர்த்தன் குழுவினரின் ஊர்வலம், பாஞ்ச் பியாரே ஐந்தாவது குருவான குரு அர்ஜன் தனது உயிரைத் தியாகம் செய்த நாள் சூன் மாதத்தில் வருகின்றது; இந்தியாவில் இது மிகவும் வெப்பமிகுந்த காலமாகும். குருவின் மீது தனிப்பட்ட முறையில் பகை கொண்டிருந்த இந்து வங்கியாளர் சந்து லால் கொடுத்த வழக்கின் அடிப்படையில் 1606இல் மே 25 அன்று இலாகூரில் மொகலாயப் பேரரசர், சகாங்கீரால் உயிர்வதைக்கு உள்ளானார். இந்நாளில் குருத்துவாராக்களில் கீர்த்தன் பாடுதல், கதை மற்றும் உணவு வழங்கல் (லங்கார்) போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. கடும் கோடைக் காலமாதலால் இனிப்பான பால், வெல்லம் கலந்த நீர் வழங்கப்படுகின்றது.
பாலியா பிரகாசு சிறீ குரு கிரந்த சாகிப் ஜி
செப்டம்பர் 1
குரு கிரந்த் சாகிப்பின் நகல், எப்போதுக்குமான சீக்கிய குரு குரு கிரந்த சாகிபிற்கு இறுதியும் அறுதியுமான குரு தகுதி வழங்கப்பட்ட நாளாகும்.
ஐக்கிய இராச்சியத்தில் தீபாவளித் திருவிழா. பந்திச் சோர் திவசில் (விடுதலையைக் கொண்டாடுதல்), சீக்கியர்கள் ஆறாவது குரு, குரு அர்கோவிந்த் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுகின்றனர். 1619ஆம் ஆண்டில் அவருடன் குவாலியர் கோட்டையில் மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சிறை வைத்திருந்த 52 இந்து அரசர்களையும் தன்னுடன் விடுவித்தார். இந்நாளில் தங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடுகின்றனர். பொற்கோயில் மிக அழகாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தீபங்களை ஏற்றுவதல்லாமல் இந்நாளில் குருத்துவாரா சென்று குருபானியை கேட்பதும் வழக்கமாக உள்ளது.
இந்நாளில்தான் குரு நானக் தற்போது பாக்கித்தானில் உள்ள நானாகானா சாகிபில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் சீக்கியர்கள் இதனை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். குருத்துவாராக்களில் வத்திகள், விளக்குகள்,தீபங்கள் ஏற்றுவதுடன் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன. பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, குருத்துவாராக்களில் அகண்ட் பத் என்ற 48 மணிநேரம் இடைவிடாது குரு கிரந்த சாகிபு படிக்கப்படுகின்றது. பிறந்த நாளுக்கு முந்தைய நாளன்று பாஞ்ச் பியாரே எனப்படும் ஐந்து அன்புக்குடையவர்கள் முன்னே செல்ல பேரணி நடத்தப்படுகின்றது. இதில் குரு கிரந்த சாகிபின் நகல் பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னால் சமயப்பாடல்களைப் பாடியவாறும் மேற்கத்திய மேளங்களை இசைத்தும் செல்ல கூட்டத்தினரும் ஒத்திசைந்து பாடிச் செல்வர்.நன்கானா சாகிபு குருத்துவாரா, பாக்கித்தான்இந்தியாவில்குரு நானக் பிறப்பைக் கொண்டாடும் வண்ணம் வாணவேடிக்கைகள்.அமிருதசரசுபொற்கோயில் வளாகத்தில் குரு நானக் செயந்து அன்று ஒளியூட்டப்பட்ட அகால் தக்த்
இசுலாம் சமயத்திற்கு மாற மறுத்ததால் குரு தேக் பகதூர் இந்நாளில் சித்திரவதைக் கொலை செய்யப்பட்டார். குரு உயிர்க்கொடையளித்த குருத்துவாரா சிசு கஞ்ச் சாகிபு
மொகலாயப் பேரரசர், ஔரங்கசீப் இந்தியாவை ஒரு இசுலாமிய நாடாக மாற்றும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனது சோதனையின் முதல் இலக்காக காசுமீரைத் தேர்ந்தெடுத்தார். காசுமீரின் அரசப் பிரதிநிதி தீவிரமாக இக்கொள்கையை நிறைவேற்றும் வண்ணம் முசுலிம் அல்லாதவர்களை கட்டாயப்படுத்தி மாற வைத்தார்.[2][3]இதனால் பாதிப்படைந்த காஷ்மீர பண்டிதர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு குரு தேக் பகதூரை நாடினர். அவரது சொற்படி மொகலாயர்களிடம் குரு தேக் பகதூர் சமயம் மாறினால் தாங்களும் மாறுவதற்குத் தயார் எனக் கூறினர்.[2][3]மொகலாயர்களின் எதிர்ப்பையும் மீறி குருவின் தலை கொணரப்பட்டு எரிக்கப்பட்ட அனந்த்பூர் சாஹிப்பிலுள்ள சிசுகஞ்ச் சாகிபு குருத்துவாரா
இதன்படி ஔரங்கசீப்பின் ஆணைப்படி, அனந்த்பூரிலிருந்து தில்லி செல்லும் வழியில் மாலிக்பூர் என்னுமிடத்தில் குரு கைது செய்யப்பட்டார். தனது பற்றாளர்கள் சிலருடன் கைது செய்யப்பட்ட குருவை ஆளுநர் பாசி பதான என்னுமிடத்தில் காவலில் வைத்து தில்லிக்குத் தகவல் அனுப்பினார். சூலை 1675 அன்று கைதான குருவை மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருந்தனர். ஓர் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு தில்லிக்கு 1675ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு செல்லப்பட்டார்.
சங்கிலிகளால் கட்டப்பட்டு அவர் இசுலாமிற்கு மாறும்வரை துன்புறுத்தும்படி பேரரசர் ஆணையிட்டார். இறுதிவரை இசுலாமிற்கு மாறாததால் தனது சமயத்தின் தெய்வீகத்தை நிலைநாட்ட அதிசயங்களை செய்து காட்ட ஆணையிடப்பட்டார். அதற்கும் மறுத்தநிலையில் பொதுமக்கள் முன்னிலையில் சாந்தினி சவுக்கில் நவம்பர் 11, 1675 அன்று தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றினர். இதனால் குரு தேக் பகதூர் "இந்த் தி சதர்" , (பொருள்: "இந்தியாவின் கேடயம்"), - இந்துக்களைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் துறந்தவர் - என்றழைக்கப்படுகின்றார்.