சி. சண்முகம் (வானொலி)
சி. சண்முகம் இலங்கை வானொலிக் கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். இவர் வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர் ஆவார்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் 1955 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய போது நாடகத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்கள் சானா (சண்முகநாதன்), மற்றும் பொன்மணி குலசிங்கம் ஆகியோர் ஆவர். 1956 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்து சிறு கைத்தொழில் திணைக்களத்தில் 22 ஆண்டுகளும், சுற்றுலா, கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வானொலி நாடகங்கள்
[தொகு]அரசாங்கத்தில் பணியாற்றிய போது இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். 15 நிமிட, 30 நிமிட தொடர் நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். தொடர் நாடகங்களில் துணி விடு தூது, லண்டன் கந்தையா, நெஞ்சில் நிறைந்தவள் ஆகியன 52 வாரங்களும், அப்பாவும் மகனும் 100 வாரங்களும் ஒலிபரப்பாகின[1].
மேடை நாடகங்கள்
[தொகு]இவரது முதலாவது மேடை நாடகம் மனிதருள் மாணிக்கம் 1957 சனவரியில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் மேடையேறியது.