உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ ராமச்சந்திரன் ஆத்ரேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ ராமச்சந்திரன் ஆத்ரேயா
Siva Ramachandran Athreya
பிறப்பு1971
தேசியம்இந்தியா
துறைநிகழ்தகவுக் கோட்பாடு
பணியிடங்கள்இந்தியப் புள்ளியல் நிறுவனம், பெங்களுரு, டாடா அடிப்படை ஆய்வுகள் நிறுவனம், மும்பை .
கல்வி கற்ற இடங்கள்வாசிங்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கிருசைசுதோப் பர்ட்சை
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

சிவ ராமச்சந்திரன் ஆத்ரேயா (Siva Ramachandran Athreya) என்பவர் புள்ளிவிவர இயற்பியல் மற்றும் இனத்தொகை உயிரியல் பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட ஒரு இந்திய நிகழ்தகவு கோட்பாட்டாளர் ஆவார்[1]. இவர் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். 1998 ஆம் ஆண்டில் வாசிங்டன் பல்கலைக் கழகத்திலிருந்து கிருசைசுதோப் பர்ட்சியின் மேற்பார்வையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு 2012 ஆம் ஆண்டில் கணித விஞ்ஞான பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Siva Athreya". Tata Institute of Fundamental Research. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
  2. "Bhatnagar Prize Awardees 2012" (PDF). CSIR, New Delhi. Archived from the original (PDF) on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)