உள்ளடக்கத்துக்குச் செல்

சிவாஜி கணேசன் நினைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு காமராஜர் சாலையிலிருந்து அகற்றப்பட்டு 2017 ஆகத்து மாதத்தில் இந்நினைவகத்தில் நிறுவப்பட்ட சிவாஜி கணேசனின் சிலை

சிவாஜி கணேசன் நினைவகம் (Sivaji Ganesan memorial) என்பது இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் நடிகர் சிவாஜி கணேசனுக்காக அமைக்கப்பட்ட நினைவிடம் ஆகும். இந்த நினைவிடம் சென்னை, நகரின் தெற்குப்புறத்தில், அடையாறில், துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

சென்னை மெரினா கடற்கரையில், காமராசர் சாலையில் 2006 சூலை 21 அன்று அப்போதைய தமிழாடு முதலமைச்சரான மு. கருணாநிதியால் சிவாஜி கணேசன் சிலை திறந்து வைக்கப்பட்டது.[1] இது 2.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல சிலை ஆகும். சிவாஜி கணேசனின் சிலை சாலையை மறைப்பதாகவும் எனவே அங்கிருந்து அதை அகற்றுமாறும் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்தது. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி வந்தது. வழக்கின்போது சிவாஜி சிலை போக்குவரத்து சமிக்ஞயை மறைக்கிறது. எனவே அதனை அகற்றலாம் என்கிறு தமிழக அரசு நீதிம்ன்றத்தில் கூறியது. அதன்படி சிலையை அகற்ற நீதிமன்றம் 2014 சனவரி 23 அன்று உத்தரவு இட்டது.[2] அச்சமயத்தில் சிலையை அகற்றி காமராசர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலம் எதிரே வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. 2017 ஆகத்து 2 அன்று இரவு சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, அடையாற்றில் கட்டபட்டிருந்த அவரது மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிலை நிறுவப்பட்டது.[3][4]

நினைவிடத்தின் அமைப்பு

[தொகு]

நடிகர் சிவாஜி கணேசனிற்கான இந்த நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் 2017 ஆம் ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் செலவில் கட்டப்பட்டதாகும். இந்த நினைவிடமானது 28,300 சதுர அடி அளவில் பரந்து கிடக்கிறது. இந்தக் கட்டிடமானது திராவிட பாணி கட்டிடக் கலையில் கட்டப்பட்டு குவிமாடங்களால் அழகு சேர்க்கப்பட்டதாகும். இந்த நினைவிடமானது நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கான இருப்பிடமாகவும் அமைந்து விட்டது.[5]

இந்த நினைவிடமானது தனது குடிநீர்த் தேவைக்கான ஒரு எதிர் சவ்வூடு பரவல் கலனையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அகற்றப்பட்டது சிவாஜி கணேசனின் சிலை". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
  2. "அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலை: தொடக்கம் முதல் முடிவு வரை". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
  3. Maran, Mathivanan (2021-08-28). "நடிகர் திலகம் சிவாஜி சிலையை அடையாறு ஆற்றங்கரையோரம் வைத்தது யார்?சட்டசபையில் காரசார விவாதம்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
  4. "Sivaji statue removed from Kamarajar Salai". The Hindu (Chennai: Kasturi & Sons). 4 August 2017. http://www.thehindu.com/news/cities/chennai/sivaji-statue-removed-from-kamarajar-salai/article19422152.ece. 
  5. "Memorial for Sivaji Ganesan to be ready in a week". The Hindu (Chennai: Kasturi & Sons). 29 June 2017. http://www.thehindu.com/news/cities/chennai/memorial-for-sivaji-ganesan-to-be-ready-in-a-week/article19166686.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_கணேசன்_நினைவகம்&oldid=3705480" இலிருந்து மீள்விக்கப்பட்டது